chennireporters.com

பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர் நடை பயணம்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அவர்கள் தலைமையில் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குமரி துவங்கி டெல்லி வரை கிசான் யாத்திரை பயண குழு இன்று காலை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் வந்தடைந்தது. மாநில விவசாயிகள் சிறப்பான வரவேற்பு பின்னர் வேளாண் துறை அமைச்சர் அலுவலகமான கிசான் பவன் அழைத்து சென்றனர்.

ஒடிசா மாநில முதல்வரின் சார்பில் வேளாண் துறை அமைச்சர் ஆர் பி சுவைன் கோரிக்கைமனுவை பெற்றுக் கொண்டு விவசாயிகளிடம் தெரிவித்ததாவது,

கிசான் யாத்திரையில் முன் வைத்துள்ள கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. மத்திய அரசை நாங்களும் இக்கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசோ தொடர்ந்து ஏமாற்றி வருவது வருத்தமளிக்கிறது வேளாண் வளர்ச்சிக்கான மாண்யங்களையும்,நிதி ஒதுக்கீடுகளையும் குறைத்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஒடிசா அரசு தனது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்கி உள்ளோம்.

எனவே பயணத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஆதரிக்கிறது. நாங்களும் வலியுறுத்துவோம் என முதலமைச்சர் உங்களிடம் தெரிவிக்க சொன்னதாகவும் தெரிவித்தார்.

தங்கள் பயணத்தில் எங்கள் அரசின் கோரிக்கையாக பெண் விவசாயிகள் குழுக்களை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக பயணக்குழுவினரை தனது அலுவலகமான கிசான் பவன்க்கு வரவழைத்து அனைவருக்கும் ரோஜா மலர்கொடுத்து, உயர்ரக கைத்தறி ஆடை அணிவித்து வெற்றி பெற வாழ்த்துக்களை முதலமைச்சர் நவீன் பட்னாயக் சார்பில் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் ஆர் பி ஸ்வைன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

இச்சந்திப்பு மிகுந்த நம்பிக்கையும், தைரியத்தையும் ஏற்படுத்தியது. இதற்காக ஏற்பாடுகளை ஒடிசா மாநில விவசாயிகள் சங்க தலைவரும் பயணக்குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் மகோபாத்ரா செய்திருந்தார்.

இதையும் படிங்க.!