Chennai Reporters

சசிகலா புஷ்பாவிடம் சில்மிஷம் செய்த பா.ஜ.க. நிர்வாகி.

பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவிடம் சில்மிஷம் செய்யும் வீடியோ  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது சசிகலா புஷ்பாவை உரசி அவரது இடுப்பை தடவி பார்க்கும் பாஜக பிரமுகர்  பொன் பாலகணபதி செய்யும் செயலை சசிகலா புஷ்பா தனது கையால் தடுத்து தடுத்து நிறுத்துகிறார் .

அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பாஜக பிரமுகர் பொன் பால கணபதி சசிகலாவின் இடுப்பை கிள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்.  இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக பாஜக அரசியல் தலைவர்கள் மத்தியில் தனது சொந்த கட்சியினரையும் பெண்களையும் பாலியல் சீண்டல் செய்வது புதிதல்ல என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது இந்த வீடியோ.

அப்போது அவர் அருகில் இருந்த பாஜக மூத்த நிர்வாகி பாலகணபதி, சசிகலா புஷ்பாவை இடித்துக் கொண்டும், அவர் புடவையை இழுப்பது, கையை தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 

மேலும், இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!