chennireporters.com

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயர் சொல்லி 20 கோடி மோசடி செய்த நித்தியானந்தம்.

சென்னை கோட்டையில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி ஃபிராடு வேலைகள் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மீது தமிழகம் முழுவதும் அடுக்கடுக்காக பல்வேறு  மோசடி புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர் சொல்லி கோட்டையில் ஆட்டம் போடும் போலி ஐஏஎஸ் நித்தியானந்தம்  என்று நாம் அவரைப் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.  சென்னை,புதுக்கோட்டை ,பெங்களூர், போடி,தேனி ,மதுரை, சேலம் என பல்வேறு பகுதிகளில் தனக்கு ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை தெரியும்.  அவர்கள் மூலம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஒவ்வொருவரிடமும் நான்கரை கோடி முதல் 15 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இது போல ஏறக்குறைய 20 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார். குறிப்பாக பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் டெல்லியில் எனக்கு மிகவும் செல்வாக்கு இருக்கிறது. என்றும் மக்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பாஜகவை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் எனக்கு அண்ணன் முறை வேண்டும் என்று பலரிடம் பல பொய்களை சொல்லி ஏமாற்றியுள்ளார். ஆனால் இதுவரை இவர் யாருக்கும் எந்த வேலைகளையும் வாங்கித் தரவில்லை வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவில்லை. இவர் மீது 30க்கும் மேற்பட்ட புகார்கள் நமது அலுவலகத்திற்கு வந்துள்ளது. அது தவிர தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை தொடர்பு கொண்டு நித்தியானந்தம் எப்படி நைசாக பேசி மூளை சலவை செய்து பணத்தை ஏமாற்றினார் என்பது தொடர்பாக தகவல் சொல்லி வருகின்றனர்.  அது தவிர சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வேளாண்மை துறையை சேர்ந்த நந்தகோபால் ஐஏஎஸ் அவரின் பெயரை சொல்லி ஐஏஎஸ் அதிகாரிகள் சாப்பிடும் கேண்டினில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று அங்கு உட்கார்ந்து கொண்டு பல அதிகாரிகளிடம் உதவிகளை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.தனக்கு எல்லா வகைகளிலும் நந்தகோபால் ஐஏஎஸ் உறுதுணையாக இருப்பார் என்றும் இவர் அதிகாரிகள் மட்டத்தில் பேசி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தனது தாய் மாமா கோவையில் பெரிய டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வருகிறார் என்று மோசடி செய்துள்ளார். ஆனால் இவரது மாமா ஆட்டோ ஓட்டி வருவது தெரிய வந்துள்ளது.  இப்படி பல்வேறு பொய்களைச் சொல்லி நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த நித்தியானந்தத்தின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி   கேள்விக்குறியாக உள்ளது.தனது காரில் அரசு முத்திரையுடன் பயணிப்பது அதிகாரிகளை மிரட்டுவது என இவரது மிரட்டல் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்த மோசடி பேர்வழி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இவரால் பாதிக்கப்பட்டவர்கள்.

 

 

 

இதையும் படிங்க.!