chennireporters.com

அறம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா ? அறம் பட இயக்குனர் கோபி நயினார்.

இலங்கை பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் சியாமளா இவர் தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அவர்களின் இரண்டாவது படத்தை அதாவது கருப்பர் நகரம்  என்ற படத்தை இயக்குவதற்கு  ஆக்ஸ் ப்ரொடக்சன் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு இந்த படத்தை தயாரிக்க உதவி செய்ய உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.நான் சென்னை வந்ததும் விஜய் அவர்களின் அலுவலகத்தில் நேரடியாக சென்று அவரை சந்தித்து ரூபாய் 5 லட்சம் பணத்தை  முன்பனமாக கொடுத்தேன். அதன் பிறகு கோபிநயினார் அவர்களை சந்தித்தவுடன் மேலும் 25 லட்சம் பணத்தை தருவதாகும் வாக்குறுதி அளித்தேன். அதன் பேரில் ஒப்பந்தம் செய்து கொள்கிறேன் என்று சொன்னேன். பிறகு கோபி நயினார் அவர்களை விஜய்  என்னை நேரில் சந்திக்க வைத்தார். இரண்டு மணி நேரம் உரையாடலுக்குப் பிறகு கோபி நயினார் எனக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை அளித்தார். அதன் பெயரில் மீதி பணத்தை கொடுப்பதற்கு நான் சம்மதித்தேன். கோபி நயினார் எனக்கு கொடுத்த நம்பிக்கையின் பேரிலேயே விஜய் அமிர்தராஜிடம் பணம் கொடுத்தேன். அதன் பிறகு என்னையும் விஜயும் கோபி நயினாரும் திரைப்பட தளத்திற்கு அழைத்துச் சென்று நடிகர் நடிகைகளை நேரில் அறிமுகப்படுத்தினார்கள்.  முதல் நாள் பூஜையிலும் நான் கலந்து கொண்டேன். இந்த திரைப்படத்தின் இயக்கம் சென்னை ஓட்டேரி பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது மேலும் மீதி பணத்தை இவர்களுக்கு கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தேன். அதற்கு அவர்கள் ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடுவதாகவும் படத்தில் வரும் லாபத்தில் 25 சதவீதம் எனக்கு தருவதாகவும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஆனால் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது 2019 ஆம் ஆண்டு வரையும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் விஜய் அமிர்தராஜன் கோபி நயினாரும் செல் நம்பர்களை மாற்றி விட்டனர். என்னை சமூக வலைதளத்தில் இருந்து துண்டித்து விட்டார்கள் உடனே இவர்களைத் தேடி நான் மீண்டும் பிரான்ஸில் இருந்து சென்னை வந்தேன்.2019 ஆம் ஆண்டு வந்து கேட்டபோது படம் எடுக்க முடியாமல் பாதியிலேயே நின்று விட்டது. உங்களுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று விஜய் அமிர்தராஜ் சொன்னார். கோபி நயினரும் வாக்குறுதி அளித்தார் மேலும் எல்லா விளம்பர நடவடிக்கைகளிலும் என் பெயரை சேர்ப்பதாக உறுதி அளித்தார்கள். ஆனால் எதிலும் என் பெயர் இடம் பெறவில்லை இடையில் மூன்று ஆண்டுகள் கொரோனா  இருந்ததால் என்னால் இந்தியா வர முடியவில்லை.இப்பொழுது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது முறையாக புகார் கொடுத்திருக்கிறேன். நான் ஏமாந்த பணத்தை பெற்று தரும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் அவர்களையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  நான் இந்தியா வருவதற்கு காரணம் குறிப்பாக தமிழர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த படத்திற்கு என்னை தயாரிப்பாளராக இணைத்தது அந்த நம்பிக்கையை இவர்கள் காப்பாற்றவில்லை.மேலும் சட்ட ரீதியாக நடவடிக்கையை நான் மேற்கொள்கிறேன் இவ்வாறு அவர் அளித்த  புகாரில் கூறியுள்ளார்.  இது குறித்து அறம் பட இயக்குனர் கோபி நாயினார் மற்றும் விஜய் அமிர்தராஜை தொடர்பு கொண்டோம். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் தரப்பு கருத்தை தெரிவித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். இது குறித்து நமது செய்தியாளர் சம்பந்தப்பட்ட சியாமலாவிடம் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு கோபி நயனாரிடம்  நான் நேரடியாக  அல்லது மறைமுகமாகவோ அவரது வங்கி  வங்கி கணக்கிற்கோ நீங்கள் பணம் கொடுத்தீர்களா அல்லது  காசோலை கொடுத்தீர்களா என்று கேட்டோம். அதற்கு அவர் நான் நேரடியாக எந்த பணத்தையும் கோபி நயினார் அவர்களிடம் தரவில்லை இருப்பினும் அவர் கொடுத்த வாக்குறுதியின் பேரிலும் அவர் மேல் இருந்த நம்பிக்கையின் பேரில்தான் நான் விஜய் அமிர்தராஜிடம் பணம் கொடுத்தேன் என்று சொன்னார் சியாமளா.கோபி நயினார் அளித்த நம்பிக்கையின் பேரில்தான் நான் பணத்திற்கு பாதுகாப்பு என்று சொன்ன அடிப்படையில் தான் சியாமளாதேவி விஜய் அமிர்தராஜிடம் பணம் கொடுத்ததாக சொல்லுகிறார் இது குறித்து கோபி நயினாரும் விஜய் அமிர்தராஜன் விளக்கம் அளித்தால் தான் உண்மை நடந்தது என்ன என்று தெரியவரும்.

 

இதையும் படிங்க.!