chennireporters.com

சோனியா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய ஒற்றுமை பயணம். மினி மாரத்தான் போட்டி நடை பெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர்
புகைப்பட்டி S மோகன்தாஸ் BE அவர்களின் தலைமையில் மினி மாரத்தான்  போட்டி நடை பெற்றது.எறையூர் செயிண்ட் சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது. ஆறு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில்  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நான்கு பிரிவுகளாக பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், ஒடிசா மேற்கு வங்காளம் அந்தமான் நிக்கோபார் மாநிலங்களின் பொறுப்பாளரும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் A.செல்லகுமார் M.B.B. S, MP. அவர்கள் தலைமையில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்  A. S. இளஞ்செழியன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரதேவ்  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர். காங்கைகுமார்  முன்னாள் பேருராட்சி மன்றத்தலைவர் சீனுவாசன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஜெனித், செயலாளர் விக்னேஷ் பாபு, கடலூர் மத்திய மாவட்ட செயலாளர் கோபிநாத், கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஐ்மோகன் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் இளந்தமிழன், ஒன்றிய இளைஞரணி தலைவர் தமிமுன் அன்சாரி மாவட்ட பொதுச் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சலாம் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் தொகுதி செயலாளர் சந்திரசேகர் தொகுதி பொதுச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தொகுதி து.தலைவர் கோவிந்தன் குமார் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தலைவர் சதீஷ்குமார் எஸ் எஸ் டி துறை மாவட்ட பொது செயலாளர் பழனிவேல் வட்டாரத் தலைவர்கள் திருக்கோவிலூர் சக்திவேல் உளுந்தூர்பேட்டை சேக் ஜமாத் N.சுகுமார் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர், N.செந்தில்குமார்  மாவட்ட தலைவர்,தொழிலாளர் நல வாரிய மாவட்ட தலைவர் ரமேஷ்,தொகுதி செயலாளர் குபேந்திரன் அன்பழகன், A.ரகுராஜன்PCC, T A செல்வராஜ் வ.தலைவர், PCC.INTUC மாவட்ட தலைவர் இளையபெருமாள் D.C மச்சகாந்தன் மற்றும்மகிளா காங்கிரஸ் அமுதா இளைஞர் காங்கிரஸ் சுனிதா இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் வீரர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்
கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் , சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

இதையும் படிங்க.!