chennireporters.com

uttarpradesh; அயோதி ராமர் கோயிலுக்கு பட்டாசு ஏற்றிச்சென்ற லாரி, உத்தரப்பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்தது.

#exclusive news#

சிவகாசியிலிருந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி  தீ விபத்தில் சிக்கியது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தீயனைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சாம்பலாகின.

Ayodhya Ram Mandir,அயோத்தி ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரியில் திறப்பு : இதுவரை வெளி வராத அரிய தகவல்கள் இதோ - ayodhya ram temple to open in january next year - Samayam Tamil

தமிழகத்தின் சிவகாசியிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி, உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தமிழகத்திலிருந்து பட்டாசு ஏற்றிக் கொண்டு அயோத்தி நோக்கி, லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, நேற்று அதிகாலை உன்னாவ்-புர்வா சாலையில் பூர்வா கோட்வாலியின் கார்கி கேடா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.उन्नाव ट्रक में आग धमाका,UP: पटाखा लेकर तमिलनाडु से बहराइच जा रहे ट्रक में लगी आग, उन्नाव हाईवे पर 3 घंटे तक होते रहे धमाके - fire broke out explosion in truckஇதில், லாரியில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறன. தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே லாரி முழுவதும் தீபற்றி எரிந்தது. தொடர்ந்து பல மணி நேரமாக பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்ததால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.

இதனால் அந்த நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அங்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அதிகாரிகள் அனைத்தனர்.Watch: Truck carrying fireworks to Ayodhya goes up in flames in Unnao | Mintஇந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் அதிர்ஷ்ட்வசமாக யாரும் காயமடையவில்லை. அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக, பட்டாசு ஏற்றப்பட்ட லாரி அயோத்திக்கு சென்றதாக கூறப்படுகிறது.Fire Broke Out In A Truck Loaded With Fireworks, It Was Going From Tamil Nadu To Ayodhya - Amar Ujala Hindi News Live - Unnao:आतिशबाजी लदे ट्रक में लगी आग, धू-धूकर जला...घंटोंபட்டாசுஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, பிரதமர் நரேந்திர மோடி அந்த கும்பாபிஷேகத்திற்கு போகக்கூடாது என்று தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்.பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

 சில சாமியார்களும் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கும்பாபிஷேகத்திற்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி உத்தரப்பிரதேச மாநிலம் உன்ன மாவட்டத்தில் பூர்வா கோர்ட்வாலி அருகே உள்ள கார்கி கிடா என்னும் கிராமத்தில் அதிகாலையில் தீப்பிடித்து எறிந்தது.இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தீயில் எரிந்து நாசமாகின. லாரியில் தீப்பற்றி எரியும் போது பட்டாசின் வெடிச்சத்தங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை  கேட்டது. அந்த அளவிற்கு பயங்கரமான சத்தத்தை உண்டாக்கும் பட்டாசுகளை ஏற்றி சென்றுள்ளனர். தொடர்ந்து பல எதிர்ப்புகளும், அசம்பாவிதங்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!