chennireporters.com

அஞ்சி நடுங்கும் அரசு டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் சாட்டையை சுழற்றும் அமைச்சர் மாசு.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாலுக்கா மருத்துவனை மாவட்ட மருத்துவமனை என அனைத்து மருத்துவ மனைகளிலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு நடத்தி வருவதால் வேலைக்கு வராமல் ஒபி அடிக்கும் அதிகாரிகள் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர்சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவர் ஆய்வுக்கு செல்லும் நேரத்தில் பணியில் டாக்டர்கள் பெரும்பாலும் இருந்ததே இல்லை செவிலியர்கள் உதவியாளர்கள் மருந்தாளுநர்கள்  மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்களிடம் டாக்டரை தொடர்பு கொண்டு அவர்களது செல்போனில் பேசும் அமைச்சர் மாசுவின் பதிலுக்கு எதிர் தரப்பிலிருந்து பேசுபவர்கள் தன்னிடம் யார் பேசுகிறார்கள் என்பதை தெரியாமலேயே பேசி வருகிறார்கள்.இவரும் நான் அமைச்சர் மா சுப்ரமணியன் பேசுகிறேன் என்றும் சொல்லுவதில்லை இதனால்  சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அஞ்சு நடுங்கி வருகிறார்கள் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதனை தொடர்ந்து பின்னூட்டத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் ஐயா எங்கள் மாவட்டத்திற்கும் வாருங்கள் எங்கள் ஊருக்கும் வாருங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் . அரசு ஊழியர்களின் அலட்சியம் டாக்டர்களின் அலட்சியமான சேவை என எல்லாவற்றையும் ஒழுங்கு படித்து அரசிற்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.ஸ்ரீபெருமந்தூர் அடுத்த  மதுரமங்கலம்,  மருத்துவமனையில் அமைச்சர்  மா.சு திடீர்   ஆய்வு செய்தார். அப்போது மகப்பேறு பிரிவுக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆண் குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண்மணிக்கு தனது பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் சில மருத்தவர்கள் பணியில் இல்லாமல்   மருத்துவமனைக்கு வந்து அட்டனன்சில் கையெழுப்பும் விட்டு பணிக்கு வராமல் போனது கண்டுபிடித்தார்.  காஞ்சிபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனரை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் டாக்டர் உமா என்பவர் மருத்துவ மனைக்கு வந்து வருகைப்பதிவேட்டில்  கையொப்பமிட்டு  சென்றுள்ளார். ஆனால்  பணியில் இல்லை அது குறித்து விளக்கம் கேட்டார். மறு முனையில் பேசிய அதிகாரி தழுதழுத்த குரலில் டாக்டர் உமா மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி திடீர் விசிட் அடித்து வருவதால் டாக்டர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க.!