chennireporters.com

#governor ravi; ஆளுநர் ரவியை வழிமறித்து கருப்பு கொடி காட்டி ஆர்பாட்டம் செய்தவர்கள் கைது.

தேனியில் நேற்று தமிழ்க் கறுப்படித்து காவிக்கு இருளடித்தது  நாங்கள் இரண்டே தோழர்கள்! ஆம்! அடியேனும் அன்புத் தோழன் சௌந்தரும் மட்டுமே! மற்ற தோழர்கள் முன்னரே பிடிபட்டுவிட்டனர். குன்னூர்! நாங்கள் ஓடியாடி விளையாடிய வைகைக்கரையது. நாங்களும் மண்ணும் மக்களும் வேறு வேறில்லையங்கு. சமர்த்தாய் ஊர்ப் பிள்ளைகளாய் காத்திருந்தோம். நேரம் வந்ததும் சாலையைத் தொட்டோம். தமிழ்த் தொண்டர்களாய்த் திமிறினோம்.

எங்கள் கரங்கள் உயர்த்திப் பிடித்த கறுப்புக்கொடிகள் நெருங்கி வருதல்கண்டு, மறுகி நின்றது ஆளுநர் வண்டி. ஆம்! நேரெதிரே ஓடி வண்டியை நிறுத்தியே விட்டோம்! அடடா கண்கொள்ளாக் காட்சி! வண்டிகளின் அணிவகுப்பு மொத்தமும் அசையாமல் நின்றது! ஆளுநர் முகத்தில் இறுக்கம்! இருக்குமல்லவா?

ஆயிரமாண்டுகால இனப்பகையன்றோ! தமிழர் அறமும், இனத்தின் இறைமைச் சீற்றமும் ஊளையிட்டதை ஊமையாக்கி உக்கார வைத்துவிட்டன. பல்லில்லாத ஊடகங்களின் உதடுகளும் தைக்கபட்டுவிட்ட பிறகு யார் சொல்வார் இச்சேதியை? குன்னூர் மக்களே சாட்சி!

தளைப்படுத்தபட்ட தோழர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. சிறைக்கனுப்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. வெளியிலிருந்த தோழர்களின் கண்டனங்கள் கொடுத்த அழுத்தத்தால் இரவு எட்டு மணிக்கு மேல் பிணையில் விடுவிக்கப்பட்டோம்

தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி போகிற இடங்கள் எல்லாம் பொதுமக்களும் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா என எல்லா இடங்களிலும் அவருக்கு எதிராகவே அமைகின்றது தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் காவி காவி பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ரவிக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்து வருகிறது.

ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பண்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராக அரசு அலுவலகங்களை ஆய்வு செய்கிறேன் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் கொண்ட நிகழ்ச்சிகளை செய்து வந்தார் ஆனால் அது அவருக்கு எதிராக அமைந்தது அதன் பிறகு அவர் மாற்றப்பட்டார் அதேபோல தமிழக மக்களின் எதிர்ப்பாலும் கண்டனத்தாலும் ஆறு என்று விரைவில் மாற்றப்படும் சூழல் ஏற்படும் அரசியல் நிபுணர்கள்.

இதையும் படிங்க.!