chennireporters.com

தேசிய கீதத்தை அவமதித்த திருத்தணி திமுக எம்.எல்.ஏ. சந்திரன்.

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் நேற்று நடந்த அரசு விழாவில் தேசிய கீதம் பாடும் போது  செல்போனில் பயன் படுத்தியதால் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழாவிற்கு வந்திருந்த கட்சி தொண்டர்களும் முகம் சுளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று  கூட்டுறவு துறை சார்பாக நடைபெற்ற விழாவில் 1918 பயணிகளுக்கு கால்நடை பராமரிப்பு, விவசாயத்திற்கான டிராக்டர் கடன், பயிர் கடன், கலர் மீன்கள் வளர்த்தல் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன் என 14 வகையான கடன் திட்டங்களுக்கு சுமார் 28 கோடியே 18 லட்சத்து ரூபாய் மதிப்பீட்டில் கடன் உதவியாக ரூபாய் 28.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடன் உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி  வழங்கினார்.  மாவட்ட ஆட்சித் தலைவர்  ஜான் வர்கீஸ் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் எம்எல்ஏ  ராஜேந்திரன், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி , கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நிகழ்ச்சி முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது அப்போது அமைச்சர் உள்பட  அனைவரும் எழுந்து நின்றனர்.பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி பக்கத்தில் நின்று கொண்டிருந்த திருத்தணி எம்எல்ஏ சந்திரனும் எழுந்து நின்றார். அப்போது அவர் செல்போன் மணி ஒலித்தது.  செல்போனில் வந்த செய்தியை பார்த்து கொண்டிருந்தார்.  தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்த பொழுது தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் தனது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். எதிரில் இருந்தே சில அதிகாரிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சைகை செய்தும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தனது செல்போனில் வந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

 

இது அதிகாரிகள் மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி வரும் சந்திரன் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு  மகளிர் அணியைச் சார்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கு படுக்கைக்கு வந்தால் தான் பதவி தருவேன் என்று பேசி அந்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சம்பந்தப்பட்ட பிரியதர்ஷினி முகநூலில் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இதையும் படிங்க.!