chennireporters.com

அயோத்தி தாசர் பிறந்த நாள்……..

1845ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவரான அயோத்தி தாசர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தார்.

திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர்.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.

திராவிட மகாஜன சபை இவரால் கி.பி.1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அயோத்தி தாசர் 1885ஆம் ஆண்டில் திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார்.

சுமார் 25 நூல்கள், 30 தொடர்கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதிய இவர் 1914ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி மறைந்தார்.

இதையும் படிங்க.!