chennireporters.com

ஊழியர்களை வாட்டி வதைக்கும் அம்பத்தூர் போக்குவரத்து கிளை மேலாளர் அன்பரசன்.

அதிகாரியின் மிரட்டலில் மன உளைச்சலுக்கு உள்ளாகி  மாரடைப்பால் மரணம் அடைந்த சக அதிகாரி பற்றிய செய்தி அம்பத்தூர் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி  மரணம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டு அம்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் உதவி கிளை மேலாளர் கைலாசபதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த மரணத்திற்கு பணிமனையின் கிளை மேலாளர் அன்பரசு தான் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் ஊழியர்கள். கைலாசபதியின் மரணத்திற்கு அனைத்து சங்கங்களும் தங்களது சங்க பலகையில் இரங்கல் தெரிவித்து அறிக்கை எழுதியுள்ளனர்.அன்பரசன் ஏற்கனவே அண்ணா நகர் பணிமனையில் பணியாற்றிய போது அங்குள்ள சங்கங்களுக்கு கட்டுப்பட்டு வாயை மூடிக்கொண்டு தனது வாலை சுருட்டி கொண்டு பணியாற்றி வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அம்பத்தூர் பணிமனைக்கு கிளை மேலாளராக பணி மாறுதல் பெற்று வந்தார். பணிக்கு சேர்ந்த நாள் முதல் ஊழியர்களை டார்ச்சர் செய்து மிரட்டுவது, எந்த காரணமும் இன்றி மெமோ தருவது, ஊழியர்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் தன்னுடைய ஆணவ போக்கால் அதிகாரத் திமிரால் பணியாற்றி வருகிறார் என்கிற குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நள்ளிரவு சண்முகம் என்கிற நடத்துநரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை துன்புறுத்தியதனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பணியின் போது இறந்து போனார் நடத்துனர் சண்முகம்.  இதே நிலைமை தற்போது நேற்று நடந்துள்ளது.

அன்பரசன் கிளை மேலாளர்.

அம்பத்தூர் கிளை பணிமனையில் (போக்குவரத்து) உதவி மேலாளராக பணியாற்றி வந்தவர் கைலாசபதி. இவர் அதிகாரிகளுடனும் ஊழியர்களுடனும் இணக்கமாக  நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்தவர்.  ஊழியர்களின் நெருக்கடிகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி பணியாற்றி வருவார்.  இந்த நிலையில் கடந்த 24ம்தேதி அவருக்கு உடல்நலம் சரியில்லை என கூறப்படுகிறது.அதனால் பணிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து எடுத்துக்கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. அதன்படி கிளை மேலாளர் அன்பரசு அவர்களுக்கு செல்போன் மூலம் தகவல்  சொல்லியுள்ளார். ஆனால் அன்பரசு  தங்களுக்கு  விடுமுறை தர முடியாது தாங்கள்  கண்டிப்பாக பணிக்கு வந்தே ஆக வேண்டும்  என்று கடும் சொற்களால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் உடனடியாக நீங்கள் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் வேண்டும் இல்லையென்றால் தங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 24ம் தேதி அதிகாலை  4.30 மணிக்கு வேலைக்கு வந்த கைலாசபதிக்கு காலை சிமார் 8 மணியளவில்  உடல் நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணியில் இருந்த கைலாசபதி ஆபிசில் சுருண்டு விழுந்துள்ளார்.  உடனடியாக அம்பத்தூர் பணிமனைக்கு எதிரே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரை  முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கைலாசபதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உதவி கிளை மேலாளர் கைலாசபதி.

இந்த நிலையில் உடனடியாக அவரது வீட்டிற்கு தகவல் சொல்லி நேற்றைய தினமே கைலாசபதியின் உடலை அடக்கம் செய்ய கிளை மேலாளர் அன்பரசு வேகப்படுத்தி அடக்கம் செய்து விட்டனர்.  கைலாசபதியின் மனைவியை சமாதானப்படுத்தி அவருக்கு சேர வேண்டிய அனைத்து பணப்பலனையும் விரைவில் வாங்கி தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். அவரது குடும்பத்தாரும் தனது கணவருக்கு இந்த நிலை ஏற்பட அன்பரசு தான் காரணமாக இருந்தார் என தெரியாமல் அவர்களது இயலாமையை பயன்படுத்திக் கொண்டு  சமாதானம் பேசி தனது காரியத்தை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் அன்பரசு.கைலாசபதி இறப்புக்கு காரணமே அன்பரசு தான் என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்கள்  அம்பத்தூர் போக்குவரத்து பணி மனை ஊழியர்கள். கைலாசபதி மரணத்தை தனது உயர் அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் கூட சொல்லாமல் மறைத்துள்ளார் என்கின்றனர் ஊழியர்கள். கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக இதே இடத்தில் பணியாற்றி வரும் அன்பரசு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்ததே இல்லை. அலுவலகத்தில் உள்ள  மின் விசிறிகளை கூட சரி செய்யாமல் ஊழியர்கள் பணியாற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

அன்பரசன் கிளை மேலாளர்.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டி பணியவைத்து  வேலை செய்ய வைக்கிறார் அன்பரசு  என்கின்றனர். இனிமேல் இதுபோன்ற எந்த ஒரு ஊழியர்களின் உயிரும் பலியாக கூடாது என்றால் அன்பரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஊழியர்கள். போக்குவரத்து துறை அமைச்சர் போக்குவரத்து துறை செயலாளர் ஆகியோர் உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஊழியர்கள்.

இந்த செய்தி தொடர்பாக கிளை மேலாளர் அன்பரசுவின் கருத்தை அறிய நாம் பலமுறை முயற்சி செய்தோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை அவர் தனது கருத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!