chennireporters.com

உங்க கிட்ட ராயல் என்ஃபீல்டு இருக்கா? உடனே திருப்பிக் கொடுங்க!

பழுதடைந்த பாகங்களை சரிசெய்து தருவதாக ராயல் என்ஃபீல்டு பைக்குகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, சில பைக் மாடல்களில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

அந்த பாகங்களை நிறுவனம் சார்பாகவே சரிசெய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எஞ்சின் பகுதியில் குறைபாடு இருப்பதாகவும், அது வாகனத்தின் செயல்திறன் குறைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறைபாடுடைய பாகங்கள் சரிசெய்து தரப்படும் எனவும், இதற்காக சுமார் 2.3 லட்சம் பைக்குகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழக்கமான சோதனை செய்யும் போது இந்தக் குறைபாட்டைக் கண்டு பிடித்துள்ளது.

2020 டிசம்பர் மாதம் முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில்தான் இந்தக் குறைபாடு இருந்துள்ளது.இந்தக் குறைபாட்டை சரி செய்யத் தேவையான நடவடிக்கைகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எடுத்து வருகிறது.குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே பிரச்சினை உள்ளது.

அனைத்து வாகனங்களிலும் பிரச்சினை இல்லை.கிளாசிக், புல்லட், மெட்டோவர் உள்ளிட்ட சில மாடல்களில் மட்டுமே பிரச்சினை இருப்பதாகவும், மொத்தம் 2,36,966 மோட்டார் சைக்கிள்களை நிறுவனம் திரும்பப் பெறுவதாகவும் கூறியுள்ளது.திரும்பப் பெறப்படும் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு, பழுதடைந்த பாகங்கள் மாற்றப்படும்.

மோட்டார் சைக்கிள் பாகங்களில் 10 சதவீதம் மட்டுமே மாற்றப்படும் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியா தாய்லாந்து இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மலேசியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன உள்ளூர் டீலர்ஷிப் நிறுவனங்கள் தங்களது வாகன அடையாள எண்ணைப் பார்த்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வார்கள் என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் சந்தேகங்களுக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்றும் கூறியுள்ளது.1800210007 எண்ணில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க.!