Chennai Reporters

பக்தர்களின் சுவை குன்றாத திருப்பதி லட்டுக்கு “306” வயது.

பக்தர்களின் மனதில் நிலைத்து நிற்கும் சுவை குன்றாத திருப்பதி லட்டுக்கு “306” வயதாகிறது. உலகம் முழுவதிலிருந்து திருப்பதிக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் விரும்பி சாப்பிடும் லட்டுவின் சுவையை யாரும் இவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.அப்படி பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவிற்கு இன்று  “306” வயதாகிறது. 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

துவக்கத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. 1803 முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலானது. அப்போது அதன் விலை காலணா மட்டுமே. தற்போது ஒரு லட்டுவின் விலை ஐம்பது ரூபாயாக உள்ளது. தரிசனத்திற்கு ஏற்றார் போலவும் லட்டுவின் விலை மாறுபடுகிறது. 

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!