chennireporters.com

GOVERNOR ரவிக்கு எதிராக கருப்பு கொடி கண்டன ஆர்பாட்டம்.

இராமநாதபுரம் வருகை சென்ற கவர்னர் ரவியை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில்
கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.New TN Governor RN Ravi has Intelligence background

ஆளுநர்ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகிறார்.

சமீப காலமாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் போது வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்றும், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்பதே சரி என்றும், தமிழக அரசே ஏற்க மறுக்கிற தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை ராமஜென்ம பூமி என்றும் உண்மைக்கு புறம்பாக பேசுவதோடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி திராவிட இயக்க தலைவர்களையும், இந்துத்துவ எதிர்ப்பு பேசுகிறவர்களையும் விமர்சித்து பேசி தமிழ்நாட்டு மக்களிடையே கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கும், சட்டத்திற்கு விரோதமாகவும் தனி அரசாங்கத்தை நடத்த நினைக்கும் ஆளுநர் இரவியின் இச்செயல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.


இன்று 16.1.2024 அன்று காலை ராமநாதபுரம் வருகை தந்த ஆளுநர் ரவியைக் கண்டித்து, “ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு, மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை.ஆளுநர் என்கிற அதிகார அமைப்பை ஒழித்துக் கட்டுவோம்”

உள்ளிட்ட முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் பெரியார் பேரவையின் தலைவர் தோழர் நாகேசுவரன் தலைமையில், தோழர் பாவெல் மாநில ஒருங்கிணைப்பாளர், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் அவர்கள் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தி கண்டன முழக்கம் செய்த அனைவரும் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழமை அமைப்பு மற்றும் கட்சிகள்.தோழர்.பெரியார் முத்து மாவட்டச் செயலாளர், சிவகங்கை, திராவிடர் விடுதலைக் கழகம்,தோழர் க .பாஸ்கரன் மண்டலச் செயலாளர், ஆதித்தமிழர் கட்சி, தோழர். ஆனந்தன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,தோழர். உதயகுமார், மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர், தோழர் .தமிழ்மாறன் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்., தோழர் செங்கொடி இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம, தோழர். இலங்கேசுவரன், தமிழக மக்கள் முன்னணி.

தோழர். மணிமாறன் தமிழக மக்கள் முன்னணி, மற்றும் தோழர். பெரியார் பேரவையின் காளிதாஸ் தோழர். செல்வம், தோழர் .வரதன், தோழர் .நித்திஷ், தோழர். சாம் செல்வராசு ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கத்துடன் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க.!