chennireporters.com

செருப்பால் அடிப்பேன்”. டென்ஷனில் கத்திய சீமான்.

செருப்பால் அடிப்பேன்”. என்று டென்ஷனில் கத்திய சீமானின் பேச்சு நாகரீகமற்றது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியல் தளத்தில் நல்ல மனநிலையற்ற பைத்தியக்காரதனமாக பேசுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சிறுபான்மை என்று அழைத்தால் செருப்பால் அடிப்பேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதத்தை விட சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம்தான் சிறந்தது. இங்கிருக்கும் கிறிஸ்துவனும், இஸ்லாமியனும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மை என்று பேசிக்கொண்டு இருந்தால் செருப்பை கழட்டி அடிப்பேன். வெறிகொண்டுவிடுவேன் என்று பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டே கீழே குனிந்து தனது செறுப்பை கழட்டினார்.எதற்கு சிறுபான்மை என்கிறார்கள் எம்ஜிஆர் இந்த நாட்டில் பெரும்பான்மையா சிறுபான்மையா? ஆனால் அவர் இங்குள்ள கிறிஸ்துவர், இஸ்லாமியரை எல்லாம் சிறுபான்மை என்கிறார். ஸ்டாலின் பெரும்பான்மையா சிறுபான்மையா? மதத்தை வைத்து எப்படி பேசுவீர்கள்? இந்துவாக இருக்கும் நான் நாளை இஸ்லாமியராக மாறுவேன். இஸ்லாமியராக இருப்பவன் கிறிஸ்துவனாக மாறுவேன்.ஆனால், தமிழனாக இருக்கும் நான் தெலுங்கனாக மாற முடியுமா? இல்ல கன்னடராக மாற முடியுமா? இல்லை போஜ்புரி, பீகாரியாக மாற முடியுமா? தேவையில்லாத ஒரு வார்த்தையை சொல்லி சொல்லி.. என்ன சிறுபான்மை? மொத்தமாக இஸ்லாமிய மக்களை நான் சொல்லவில்லை. அநீதிக்கு துணை நிற்பவர்களைதான் சொன்னேன்.

நீங்கள் சாத்தானின் குழந்தைகள் என்று நான் சொல்லவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறிவிட்டீர்களே என்று ஆதங்கப்பட்டேன். ஏனென்றால் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கிறார்கள். எனக்கு பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இறுதி நாளில் ஏக இறைவனுக்கு நீங்கள் சொல்லியே தீரணும்.எனக்கு வாக்கு செலுத்துபவர்கள் செலுத்தாதவர்கள் என்று சொல்லவில்லை. எதற்காக என் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸுக்கு இன்னும் அரசியல் அதிகாரத்தை கொடுப்பது எவ்வளவு ஆபத்து. அதற்கு துணை நின்ற துரோக கட்சி திமுகவுக்கு எப்படி அதிகாரம் கொடுப்பது.ஸ்டாலின் முதலமைச்சர். உதயநிதி துணை முதலமைச்சர். இன்பநிதிக்கு அரசு விழாவில் என்ன வேலை? எத்தனை தலைமுறை தலைமுறையாக நீங்கள் ஆட்சி செய்துகொண்டே இருப்பதற்கு எங்கள் நாட்டை பட்டா போட்டு கொடுத்து இருக்கிறார்களா? நான் ஏற்ற ஒரே தலைவன் பிரபாகரன், என்னுடைய அரசியலுக்காக துணை நிற்கிறேன்.அதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ நான் கேள்வி எழுப்பியதை கேளுங்களேன். தாய் மதம் என்பது இஸ்லாமியரும், கிறிஸ்துவர்களும் வாருங்கள் என்பதல்ல. வில்லியம் ஜோன்ஸ் கையெழுத்து போட்டவுடன்தான் நாங்கள் இந்துக்களானோம். நாங்கள் சைவர்களாக இருந்தால் என் ஆள் மடத்தில் இருப்பார். இந்துவாக இருந்தால்?

 

அதனால் நாங்கள் சைவராக திரும்ப வேண்டும். அதற்காகவே நான் சொன்னேன். ஜவாஹிருல்லா பேசுவார். அவர் சார்ந்துள்ள கட்சி, உதயசூரியன் சின்னத்தில் ஒரு சீட் வேண்டும் என்பதற்காக பேசுவார். அவர் அதிமுக கூட்டணியில் இருக்கும்போது பேசிய பேச்சை கேட்கிறீர்களா? ஒருமுறை போட்டுக்காட்டவா?” என்று தெரிவித்து உள்ளார். ஆனால் சீமானின் பேச்சு அரசியல் நாகரீகமாக இல்லை என்றும் நிதானமிழந்து பேசுவது அவர் நல்ல  சுய நினைவின்றி பேசுவது தெரிகிறது.

 

இதையும் படிங்க.!