chennireporters.com

அரசியல் சாசன தந்தை அம்பேத்கர் நினைவு நாள் இன்று.

புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர்.B.R.அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாள் இன்று.

வாக்குரிமை;
பட்டதாரிகளுக்கும்,பட்டா உள்ளவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை என்று இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் வாக்குரிமை என்பதை உறுதி படுத்தினார்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் ” ஒரு மனிதன் ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்று இந்திய வரலாற்றில் முதன்முதலாக சட்டம் இயற்றினார்.

 

 

இட ஒதுக்கீடு;
சமத்துவமற்ற சாதிய சமூகத்தில் அனைத்து மக்களும் சமத்துவம்பெற கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி  இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பலன்பெற செய்தார். குறிப்பாக OBC,  SC  & ST பிரிவினர் அதன் மூலம் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் பெற வழிவகை செய்துள்ளார்.

பெண் உரிமை;
ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு , ஆணுக்கு சம்மான ஊதியம், பல்வேறு குழுக்களில் மகளிர்க்கான பிரதிநிதித்துவம், என பல சட்டங்களை இயற்றினார். பின்னாளில்  மறுமனம், பெண் வாரிசு உரிமை, விவாகரத்து உரிமை மற்றும் அதில் வாழ்வாதாரம் பெறும் உரிமை சொத்துரிமை ஆக பெண்  உரிமைக்கான முழுமையான சட்டத்தை அவர் கொண்டு வந்த போது Hindu Code Bill அதனை அன்றைய பிற்போக்கு வாதிகள் ஏற்காததால் தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியை ராஜனாமா செய்த அப்பழுக்கற்ற அரசியல் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

தொழிலாளர் நலம்;
8 மணி நேர வேலை,முத்தரப்பு பேச்சுவார்த்தை, அகவிலைப்படி,போனஸ், மருத்துவ காப்பீடு,வேலை வாய்ப்பு மையம், தொழிற்சங்க அங்கீகார உரிமை,போன்றவைகளை சட்டமாக்கினார்.

பொருளாதாரம்;
ரிசர்வ் வங்கி தோற்றுவிக்க காரணமாக இருந்தார். இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து,புதியதாக அச்சடிக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தார்.நோபல் பரிசு பெற்ற திரு.அமிர்த்தியாசென் தன் பொருளாதார தந்தை டாக்டர். அம்பேத்கர் என போற்றி மகிழ்ந்தார்.

தேசிய ஆணையங்கள், தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், தேசிய நதிநீர் ஆணையம், மின்சார ஆணையம் அமைந்திட சட்டம் இயற்றினார்.

நதிநீர் இணைப்பு ; நதிகள் தேசியமயம் நதிநீர் இணைப்பு திட்டத்தை முன் வைத்தார். அணைகள் மற்றும் பல்நோக்கு திட்டங்கள்; பக்ராநங்கல்,ஹீராகுட்,தாமோதர் பள்ளத்தாக்கு தோற்றுவித்தவர் தேசிய கொடியில் “தம்ம சக்கர்த்தை” இடம் பெற செய்தவர்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில் பொருளாதாரத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் ஆசிரியர்.  குறுகிய காலத்தில் ஆறு வருடங்கள் M.A.,MSc.,Ph.D.,D.Sc.,Bar-at-Law & Course in Sanskrit  என உலகின் மூன்று முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்ற உலகின் உன்னத கல்வியாளர். D. Lift. மற்றும் LL.Dஆகிய கௌரவ டாக்டர் பட்டங்களை உலகின் சிறந்த பல்கலைகழகங்கள் அவருக்களித்து பெருமை அடைந்திருக்கின்றன.

மக்கள் கல்வி கழகம் என்ற பெயரில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஏழை எளியோருக்கு கல்வி செல்வம் தந்த தன்னிகரில்லா தேசிய தலைவர். தொழிலாளர் பெயரில் இந்தியாவில் முதன்முதலில் ” சுதந்திர தொழிலாளர் ” கட்சியை” தோற்றுவித்து உழைக்கும் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்திய உத்தமர்.

பல அறிவுப்பூர்வமான புத்தகங்களை எழுதிய பேரறிவாளர்.மாத இதழ்களை நடத்தியவர்.  இலண்டனில் நடந்த மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்ட இந்தியாவின் ஒப்பற்ற தேசிய தலைவர். இந்தியாவின் பிரச்சினைக்கு தீர்வு இந்த மூவரின் கைகளில்தான் உள்ளது என பிரிட்டிஷாரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.காந்திஜி, முகமது அலி ஜின்னா,மற்றும் Dr. அம்பேத்கர்.

The Greatest Indian-னாக “Out Look” Magazine “CNN-IBN” &”History Channel” ஆகிய ஊடங்கள் மூலம் மக்களாலும் ,அறிஞர்களாலும் தெரிவு செய்யப்பட்டவர்.

உலகின் ஆறு முன்னணி அறிவாளிகளில் ஒருவராக பெருமைப்படுத்தப்படுபவர்.

250 ஆண்டுகளில் மனிதகுலத்திற்கு சிறப்பாக பணியாற்றியவர்களில் முதன்மையானவராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டவர் டாக்டர்.அம்பேத்கர்.

 

சிறந்த கல்வியாளராக ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக,சிறந்த எழுத்தாளராக, பொருளாதார நிபுணராக,பேரசிரியராக, இந்திய அரசியலமைப்பு சட்ட சிற்பியாக , பல்தோக்கு திட்டம் வகுத்த பொறியியல் வல்லுனராக,மனிதகுலத்தின் மிகப்பெரிய மனித உரிமை போராளியாக,பெண்ணுரிமை சிந்தனையாளராக,புத்தமதத்தை இந்தியாவில் புணரமைத்த போதிசத்துவராக , புத்தமும் அவர் தம்மமும் வழங்கிய மெய்ஞானியாக,அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக தன்னிக்கரில்லா தேசிய தலைவராக உனபன்முக ஆளுமைக்கொண்ட மாமனிதர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இத்தகைய பெரும் சிறப்பிகளைபெற்ற பெருமகனார் உலகில் எவர் உளர்?

மக்கள் அனைவருக்குமான அந்த சமத்துவ தலைவரின் நினைவுநாளை அனைவரும் நினைவுபடுத்தி இந்த நினைவேந்தல் நாளில் மாபெரும் தலைவருக்கு நன்றி செலுத்துவோம்.

 

இதையும் படிங்க.!