திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரம் இல்லாமல் 300க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகிறது.
மாதாவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம்.
இந்த கம்பெனியில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த சுத்திகரிக்கப்படாத கழிவுகளை அதே பகுதியில் கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விளங்காடு பாக்கம், சென்றம்பாக்கம் உள்ளடக்கிய பஞ்சாயத்துகளில் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகள் தமிழக அரசின் தொழிற்சாலை சட்ட விதிகளின் படியும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி செயல்படாமல் இயங்கி வருகிறது.
கவுன்சிலர் மல்லிகா மீரான்
இது குறித்து புழல் ஒன்றியம் இரண்டாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடந்த மூன்று வருடங்களாக பல புகார் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த புகார் கடிதங்கள் மீது இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக புழல் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா பெர்னாண்டோ மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. கலெக்டர் பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ்.
இந்த நிலையில் பழைய மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் மாற்றப்பட்ட பிறகு புதியதாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற டாக்டர் பிரபு சங்கர் இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்கனவே பிடிஓவாக புழல் ஒன்றியத்தில் பணியாற்றிய சித்ரா பெர்னாண்டோவை அதே அலுவலகத்தில் வேறொரு பதவிக்கு கிராம பஞ்சாயத்து நிர்வகத்தை கவனிக்கும் பொறுப்புக்கு உத்தரவிட்டு பணி மாற்றம் செய்திருக்கிறார்.
ஆனால் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எந்த விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்படி சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சித்ரா மற்றும் அவரது அலுவலகத்தைச் சார்ந்த ஊழியர்கள் பல லட்சம் ரூபாய் லஞ்சப்பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அது தவிர தீபாவளிக்கு ஒவ்வொரு நிறுவனங்களிலும் தலா 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை ஒரு பெரும் தொகை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது .ஆனால் பொது மக்களுக்கும் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் புகார் கொடுத்தும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத பிடிஒ சித்ரா பெர்னாண்டோ மீது இதுவரை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுக்காமல் அவரை அதே அலுவலகத்திற்கு வேறொரு பதவிக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்கின்றனர் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள்.
அது தவிர ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சித்ரா மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அதே அலுவலகத்தில் வேறு பதவியில் போடச் சொல்லி உத்தரவிட்டதற்கான காரணம் என்ன? யாருடைய அழுத்தத்தால் அதே இடத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. பிடிஒ சித்ரா பெர்னாண்டோ.
பிடிஒ சித்ரா பெர்னாண்டோவிற்கு கட்டிங் வாங்கி தரும் ஒரு இளநிலை உதவியாளர் மேடம் காசு கேட்கிறாங்க என்று ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்று ஐ பிச்சில் இருக்கிறதாம். பிடிஒ சித்ரா பெர்னாண்டோ கல்லா கட்டிய கதை புதிய கலெக்டருக்கு தெரியாதோ என்கின்றனர் கலெக்டர் ஆபிஸ் ஊழியர்கள்.
பிடிஒ மணி சேகரன்
புதிதாக பொறுப்பேற்றுள்ள பிடிஒ மணி சேகரன் ஏற்கனவே இந்த அலுவலகத்தில் மேனேஜராக பணியாற்றினார். அப்போது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்த வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மூலம் தான் ஏற்கனவே பணியாற்றிய இதே இடத்திற்கு புழல் பிடிஒ ஆபிசிற்கு மீண்டும் பிடிஒவாக பதவி உயர்வு பெற்று வந்துள்ளார் மணி சேகரன் என்பது குறிப்பிடதக்கது.