chennireporters.com

எல்லை மீறும் அரசு பள்ளி மாணவர்கள். போதைக்கு அடிமையாகும் அவல நிலை; நடவடிக்கை எடுக்குமா அரசு.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் போலீஸ் அதிகாரி ஒருவர் அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியதாக செய்தி வெளியானது.  இது குறித்து நாம் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று கல ஆய்வு செய்தோம் அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் பெண்கள் பள்ளியும் இயங்கி வருகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்  ஒரு சிலரை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார்  தாக்கியதாகவும் மாணவர்களின் செருப்பை தீயிட்டு கொளுத்தியதாகவும் செய்தி வெளியானது.அந்த செய்தி குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினோம் விசாரணையில் மாணவர்கள் முழு அளவு பேண்ட் அணியாமல் முக்கா பேன்ட் அணிந்தும் ஒழுக்கம் இல்லாத செருப்புகளை அணிந்து பள்ளிக்கு வருவது குறித்து ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். அது தவிர மாணவர்களின் கையில் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ளனர் மாணவர்களின் தலைமுடி மற்றும் கைகால் விரல்களில் நகங்கள் வெட்டப்படாமல் ஒழுக்கம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அது தவிர மாணவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஆற்றங்கரையின் ஓரத்தில் கையில் மது பாட்டில்களுடன் மது குடிக்கும் படங்கள் நமக்கு பிரத்தியேகமாக கிடைத்தது.  அது தவிர ஒரு மாணவர் குடிபோதையில் விழுந்து தன் நிலை மறந்து இருந்த செய்தி பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவரை ஆசிரியர் மற்றும் போலீசார் உதவியுடன் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதற்கான ஆவணங்களும் நமக்கு கிடைத்தது.அது தவிர 18 வயது கூட நிரம்பாத மாணவர்கள் அதே பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுடன் கூடா நட்பு வைத்து பழகி வந்துள்ளனர். அது தவிர ஒரு மாணவிக்கு ஒரு மாணவர் பிறந்த நாளை கொண்டாடி கேக் வெட்டி அந்த மாணவிக்கு கேக் ஊட்டும் புகைப்படங்களும் நமக்கு கிடைத்தது. அது தவிர்த்து பெண்கள் பள்ளியின் கழிவறையின் மதில் சுவர் மீது ஏறி மாணவர்கள் உட்கார்ந்து மாணவிகளை தொந்தரவு செய்த புகைப்படங்களும் நமக்கு கிடைத்தன.இது குறித்து மாணவர்களிடம் பேச முயற்சித்தோம் எந்த மாணவர்களும் பேச மறுத்தனர். நமக்கு கிடைத்த ஃபோட்டோக்களை கேட்டபோது தலைதெரிக்க ஓடினார்கள். எனக்குத் தெரியாது எனக்கு அதில் சம்பந்தமில்லை என்று சில மாணவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் அவர்களை நேரில் சென்று சந்தித்தோம்.  மேற்படி பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு;கேள்வி; சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதற்குச் சென்றீர்கள் மாணவர்களை அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அந்த குற்றச்சாட்டு குறித்து உங்கள் பதில் என்ன என்று நாம் கேட்டோம்.

பதில்; அது போன்ற ஒரு சம்பவம் எதுவுமே நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.மாணவர்கள் ஒழுக்க கேடாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுரை சொன்னேன் அவ்வளவு தான்.கேள்வி; மாணவர்களை அடிக்கவிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர் ஏன் உங்கள் மீது அப்படி ஒரு செய்தியை தொலைக்காட்சி பேட்டியளித்தார் என கேட்டோம்.

பதில்; அது தொடர்பாக நீங்கள் அவரைத்தான் கேட்க வேண்டும். நான் அவரை அடிக்கவில்லை. அவர் செந்த தவறை மறைக்க அவர் பொய்சொல்கிறார்.

கேள்வி; சம்பந்தப்பட்ட பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் உங்களுக்கு எங்களது பள்ளி மாணவர்கள் ஒழுக்கக்கேடாக நடந்து வருகின்றனர் அவர்களுக்கு நீங்கள் நேரில் வந்து அறிவுரை கூறுங்கள் என்று புகாரோ அல்லது கோரிக்கையோ வைத்தார்களா என்று கேட்டோம்.பதில்; ஆம் என்று சொன்னார்.  சில மாணவர்கள் ஒழுக்கக்கேடாக உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களையும் அவ மரியாதையுடனும் மரியாதை குறைவாகவும் பேசுகின்றனர் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினேன். அதை தவிர அது போன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.

கேள்வி; மாணவர்களின் செருப்பை ஏன் கொளுத்தினீர்கள் என்று கேட்டோம்.

பதில்;  நான் அதை செய்யவில்லை. செருப்புகளையும் நான் கொளுத்தவில்லை. ஏற்கனவே பள்ளியை கூட்டிப் பெருக்கி குப்பையை கொளுத்தி இருந்தார்கள். அந்த குப்பை எரிந்து கொண்டிருந்தது மாணவர்கள் அணிந்திருந்த செருப்புகள் ஒன்று கூட ஒழுங்காக இல்லை. எனவே அதை குப்பையோடு குப்பையாக பள்ளி நிர்வாகம் தான் எரித்ததே தவிர நான் அவ்வாறு செய்யவில்லை.

கேள்வி; ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவனை திட்டமிட்டு அடித்ததாக உங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உங்க பதில் என்ன?பதில்; அது தவறான செய்தி. திரித்து கூறப்படும் வதந்தி. அவர் எந்த சமூகம் என்று எனக்குத் தெரியாது. நான் அவரை எந்த சமூகம் என்றும் விசாரிக்கவில்லை. அவரும் ஒரு வழக்கறிஞரும் உறவினர்கள். அவர் சொல்லிக் கொடுத்ததின் பெயரில் தான் அந்த மாணவர் பொய்யான ஒரு செய்தியை சொல்லுகிறார். அவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. சட்ட ரீதியாக எதையும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். அவர் செய்த தவறை மறைக்க பொய் சொல்லுகிறார் என்றார்.

 

அது தவிர்த்து மேலும் பேசிய டிஎஸ்பி கணேஷ்குமார் பக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையின் அருகே உள்ள மதில் சுவர் இருக்கிறது. அந்த மதில் சுவரின் மீது சில மாணவர்கள் ஏறி நின்று மாணவிகளுக்கு தொந்தரவு தருகிறார்கள். கையில் செல்போனை எடுத்துக் கொண்டு வீடியோவும் எடுக்கிறார்கள். இது தொடர்பாக சில பெற்றோர்கள் எங்களிடம் நேரடியாக வந்து புகார் அளித்துள்ளனர். அந்த புகார் குறித்து நாங்கள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினோம்.அப்போது சில மாணவர்கள் நம்மிடம் சிக்கினார்கள். அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் நாம் பறிமுதல் செய்தோம் என்னென்ன புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது என்கிற விவரத்தையும் நாங்கள் வாங்கினோம். அது தவிர கையில் மது பாட்டிலுடன் குடிக்கும் வீடியோக்கள் கிடைத்த்து. ஒரு மாணவர் குடித்துவிட்டு பள்ளி சீருடையில் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மாணவர்கள் கையில் கொடூர ஆயுதங்களை வைத்து சுற்றி வருகின்றனர். மாணவர்கள் பல தீய, குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான அனைத்து புகைப்படங்கள் வீடியோக்கள் என பல ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது என்று சொன்னார்.மாணவர்களின் இந்த நிலை ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் மட்டும் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நிலை தற்போது இப்படித்தான் இருக்கிறது. தமிழக அரசு குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாணவர்கள் ஒழுங்கான சீருடை அணிந்து வர வேண்டும் ஒழுங்காக தலைமுடி வைத்திருக்கவேண்டும். கை கால் நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது ஒழுக்கக்கேடாக நடக்கும் நடந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு நேரில் அழைத்து மாணவர்கள் செய்யும் தவறுகளை குறைகளை சுட்டிக்காட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்த வேண்டும்.மாணவர்கள் அப்படி திருந்தாவிட்டால் மாணவர்களை பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் ஆசிரியர்களை எதிர்த்து அவமரியாதையுடன் பேசும் மாணவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை சட்டம் இயற்றி அதை உடனடியாக அமல்படுத்தினால் மட்டுமே மாணவர்களுடைய வாழ்க்கை எதிர்காலம் சிறப்பாக அமையும் இல்லாவிட்டால் மாணவர்கள் போதை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தில் அவர்கள் ரவுடிகளாகவோ கூலிப்படைகளின் கும்பலாகவோ மாறுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இதையும் படிங்க.!