chennireporters.com

முதல்வரை ஏமாற்றிய திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன். குமுறும் உபிக்கள்.

கட்சி தலைமைக்கு கட்டுப்படாத மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆளுங்கட்சியில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. அவை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஐந்து அமைச்சர்கள் அவற்றுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது அமைச்சர் மாவட்ட செயலாளர் என இரு  பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வு என்ற பெயரில் மண்டல பொறுப்பாளராக கௌரவ பதவி பதவி வழங்கப்பட உள்ளது.ஒரு சில மாவட்டங்களில் நான்கு முதல் ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதற்கு மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் ஒருவரே இருப்பதால் அவர்களால் கட்சிப் பணிகளை சரிவர செய்ய முடிவதில்லை. அரசு பணிகளையும் செய்ய முடிவதில்லை என திமுக தலைமை இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரட்டை பதவிகளில் உள்ளவர்களின் கையில் உள்ள பதவிகள் மற்றும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என்று அண்ணா அறிவாலாய வட்டாரம் தெரிவிக்கின்றன.  ஏற்கனவே பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சில மாவட்ட செயலாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் செயல்பாடுகளை சரியில்லை என்று விமர்சித்தார். ஏன் பயங்கரமாக எச்சரித்தார் என்று கூட சொல்லலாம். ஏன் அமைச்சர்களையே கூட மாற்றப்படலாம் என்று தெரிவித்தார். அதன்படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர்  பதவி பறிக்கப்பட்டது.இந்த நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் இவர் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில்  70 திருமணமும், 69 உறுப்பு தானமும் செய்யப்படும் என்று இரண்டு பக்கத்தில் விளம்பரம் செய்திருந்தார். ஆனால் இதுவரை அப்படி ஒன்றை எதுவும் செய்யவில்லை. அது தவிர பொது உறுப்பினர் கூட்டமும் நடத்தவில்லை. ஒன்றிய செயலாளர்கள் கூட்டமும் நடத்தவில்லை. மாவட்ட செயலாளராகி ஒரே ஒரு முறை மட்டும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகு எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை.  இல்லம் தேடி சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சி தலைமை உத்தரவிட்டும் இவர் தன்னுடைய வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்களையே புதிய உறுப்பினர்களாக சேர்த்து விட்டு  பொய்யான தகவலை கட்சி தலைமைக்கு அனுப்பிவிட்டார். அதை கட்சி தலைமை புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்களின் செல்போன் எண்ணையும் வாக்காளர் பட்டியல் உள்ள என்னையும் சரி  பார்த்தால் உண்மை தெரிந்து விடும்  என்கின்றனர் திருத்தனி திமுகவினர்.சந்திரன் கட்சி தலைமைக்கு கொடுத்த வாக்குறுதிப்போல எதையும் செய்யவில்லை. அதாவது தலைவர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தையும் நடத்தவில்லை அது தவிர எம் எல் ஏ பண்டில்  அதிமுகவினருக்கு அரசு பணிகளை கமிஷன் வாங்கிக் கொண்டு தருவதாக உடன்பிறப்புகள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். மேலும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மூன்றாவதாக ஒரு ஒன்றியத்தை உருவாக்கி கட்சிக்குள் புது குழப்பத்தை ஏற்படுத்தினார். புதிய ஒன்றிய செயலாளராக  சந்திரன் என்பவரை புதிதாக நியமித்தார். ஆனால் அந்த ஒன்றியத்திற்கு  மூன்று மாதங்களாகியும் இதுவரை நிர்வாகிகளை நியமனம் செய்யவில்லை. ஆனால் ஒன்றிய செயலாளர் பதவி வழங்க சந்திரனிடம்  எம்எல்ஏ சந்திரன்  சில லட்சங்களை சன்மானமாக வாங்கிக் கொண்டு பதவி வழங்கியதாக திருத்தணி திமுக உடன் பிறப்புகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திமுகவில் மொத்தம் 23 அணிகள் உள்ளன. அந்த அணிகளில்  உறுப்பினர்களாக  இல்லாதவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு பல அணிகளில்  மாவட்ட, ஒன்றிய, நகரம் என பல அமைப்புகளுக்கு அமைப்பாளராக பதவி வழங்கியுள்ளார் சந்திரன். அது தவிர அதில் அதிமுகவை சேர்ந்த ஒரு சிலருக்கு  பதவி வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .எம்எல்ஏ நிதியில் கொடுக்கப்படும் வேலைகளுக்கு இவருக்கு மட்டும் எட்டு சதவீதம் கமிஷன் வாங்கிக் கொள்ளுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் திருத்தணி திமுகவினர்.இது தொடர்பாக கட்சி தலைமைக்கு பல புகார் கடிதங்களை அனுப்பி இருப்பதாக சொல்கின்றனர் திருத்தணி திமுகவினர்.  மாவட்ட செயலாளர்களை கலையெடுக்கும் போட்டியில் முதல் விக்கெட் திருவள்ளூர் மேற்கு மாவட்டமாகத்தான் இருக்கும் என்கின்றனர் கட்சி தலைமை கழக   நிர்வாகிகள்.திருத்தணி அதிமுக யூனியன் சேர்மன் தங்கதனம் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இனைத்துக்கொண்டார். கட்சியில் சேர்ந்த கொஞ்சம் நாட்களிலேயே எம்.எல்.ஏ. சந்திரன் தன்னை சேர்மன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டுகிறார் மேலும் காஞ்சனா பன்னீர் செல்வம் என்பவரிடம் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு அவரை சேர்மன் பதவியில் உட்கார வைக்க துடிக்கிறார் என்று குற்றசாட்டை முன் வைத்தார். இதனால் மனமுடைந்த தங்கதனம் திமுகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். இப்படி சந்திரன் தொல்லை தமிழும் சரஸ்வதி நாடகத்தில் வரும்  வில்லன் அர்ஜூனை போல செயல்படிகிறாராம் எம்எல்ஏ சந்திரன். விரைவில் சந்திரன் ஆட்டத்திற்கு திமுக  தலைமை முடிவு கட்டும் என்கின்றனர் உபிக்கள் சிலர். இதே நிலை நீடித்தால் வரும் எம்.பி.தேர்தலில் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கின்றனர் உடன்பிறப்புக்கள்.

இதையும் படிங்க.!