chennireporters.com

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி மரணம்.

சிறுமி ரோஷினி

சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டலில் சாப்பிடும் துரித உணவுகள் மற்றும் சிக்கன் வகைகள் பிரியாணிகள் ஆகியவற்றை தரமானதுதானா? நம்பி சாப்பிடலா? என்கிற ஒரு அச்சத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் செவன் ஸ்டார் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஆரணி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மற்றும் அவரது மகள் ரோஷினி இருவரும் செவன் ஸ்டார் பிரியாணி கடையில் கடந்த 8 ஆம் தேதி தந்தூரி சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

அதே போன்று அன்று 200 க்கும் மேற்பட்டோர் பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்.

150க்கும் மேற்பட்டோர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.சாப்பிட்ட சிறிது நேரத்திற்குள் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.ரோஷினிக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .

அங்கு ரோஷினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.அதேபோல 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது.சமூக வலைதளங்களில் இந்த செய்தி பகிரப்பட்டது.பார்சல் வாங்கிச் சென்றவர்களுக்கு பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டலின் உரிமையாளர் காதர் பாஷா மற்றும் சமையல்காரர் முனியாண்டி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது பத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வாந்தி மயக்கம் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஓட்டலில் கெட்டுப்போன கோழி கறியை சமைத்து விற்பனை செய்ய ப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

அந்த ஓட்டலில் இருந்த 15 கிலோ கெட்டுப்போன கோழிக்கறியை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே கோழி இறைச்சிகளை சாப்பிடுவதினால் பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்பெய்தி விடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது தவிர இந்த வளர்ப்பு கோழிகளுக்கு பெருமளவிலான தடுப்பூசிகள் போடப்படுவதால் மக்களுக்கு அதிக பக்க விளைவு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை, திருச்சி, நெல்லை, கோவை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிறிய நகர் புற பகுதிகளில் குறிப்பாக சென்னை அருகே உள்ள ஆவடி, அம்பத்தூர், அண்ணா நகர், பெரம்பூர், திருவான்மியூர், அடையார், போரூர், போன்ற இடங்களில் தெருவோரக்கடைகள் மற்றும் பெரிய, சிறிய கடைகளில் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சிக்கன் 65 , சிக்கன் லாலிபாப் என சிக்கனை பல வகைகளில் சமைத்து விற்கப்படுகிறது.

குறிப்பாக டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள தள்ளுவண்டி கடைகளில் கோழி ஈரல்கள் கோழியின் கால்கள் வறுத்து விற்கப்படுகின்றன. இவை சாப்பிட தகுதியற்றவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.

ஓட்டல்களில் விற்கப்படும் கோழிக்கறி தரமான கோழி இறைச்சிகள் தானா? என்று உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எந்தவித ஆய்வுகளையும் செய்யாமல் அலுவலகத்திற்கு வந்து ஓப்பி அடித்துவிட்டு செல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது.

மாதத்திற்கு ஒரு சில கடைகள் மீது மட்டும் வழக்குப் போட்டு விட்டு அபராத தொகை வசூலிப்பதோடு சரி. பெரிய ஓட்டல்களில் சோதனை செய்து உணவின் தரத்தை அதிகாரிகள் சோதிப்பது இல்லை என்கின்றனர்.

குறிப்பாக கோழி மற்றும் ஆட்டு கறியில் ஏகப்பட்ட குளறுபடிகளும் பழைய கறிகளை பதப்படுத்தப்பட்டு பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரியாணிக்கு பெயர் போன கடைகளில் அங்கு விற்கப்படும் பிரியாணி மற்றும் சிக்கன் வகைகளை சோதனை செய்யாமல் இருப்பதற்கு மாதம்தோறும் ஒரு பெரிய தொகையை கைமாற்றாக வாங்குகிறார்கள் என்று ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான மாநகரங்கள் மாவட்ட தலை நகரங்களில் இதுபோன்ற செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது.

சிறுமி ரோஷினி உயிர் பறிக்கப்பட்ட தைப்போல இனிமேல் தமிழகத்தில் ஹோட்டலில் சாப்பிட்டு எந்த உயிரும் பரி போகக்கூடாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

இதற்கு அரசு உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!