Chennai Reporters

ஏ.டி.எம். கட்டணம் இன்று முதல் உயருகிறது. பொதுமக்கள் கண்டனம்.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும்பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதற்கு மேல் நடை பெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்படுகிறது.அதன்படி, ரூ.20-க்கு பதிலாக ரூ.21 ஆக இது அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

ஏ.டி.எம். பராமரிப்புபாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்
துவதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏடிஎம் சேவை கட்டணத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.

முந்தைய காலத்தைப் போல வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம் அதனால் எந்தவித நட்டமும் பொதுமக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்கிற மனநிலைக்கு பலர் வந்துள்ளனர்.

அறிவியல் முன்னேற்றத்திற்கு பிறகு கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகும் வங்கி ஏடிஎம் சேவைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பொதுமக்கள் ஏற்கவில்லை.

வங்கி ஊழியர்களுக்கு வேலை பளு குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கடும் நிதிச் சுமையில் இருக்கும் பொழுது இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!