கலெக்டர் (collector) வீட்டின் ஒரு பகுதியை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் எண் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஒரு இடம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது.இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அந்த இடத்தின் பட்டா பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்து பார்த்தபோது அந்த இடம் கிரையம் செய்தது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பங்களாவின் ஒரு பகுதி என்று தெரியவந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரவன் குமார் ஜடாவத். ஐ.ஏ.எஸ்.
அரசுக்கு சொந்தமான இடத்தில் கலெக்டர் பங்களா கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார் சார் பதிவாளர் கதிரவன்.லஞ்சப் பேர்வழி சார்பதிவாளர் கதிரவன்.
(தற்போது சார்பதிவாளர் கதிரவன் மாரடைப்பால் இறந்து விட்டதாக சொல்கிறார்கள் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள்.)
இது பற்றி மாவட்ட பதிவாளர் சென்னை பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு புகார் செய்திருந்தார். இதை எடுத்து கலெக்டர் பங்களாவை தனியார் தனி நபருக்கு 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரம் பதிவு செய்த சார்பதிவாளர் கதிரவனை பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். பதிவாளர் கதிரவன் லஞ்சம் கொடுத்தால் தனது சொந்த வீட்டையே வேறு ஒருவருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துவிடுவாராம் அவருக்கு தேவை லஞ்சம். இப்படி இவர் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்தின் மதிப்பு சுமார் 70 கோடியை தாண்டும் என்கிறார் உள்ளூர் பத்திர எழுத்தர். தொடர்ந்து காட்பாடி பதிவாளர் கவிதா, கோவை தொண்டாமுத்தூர் பதிவாளர் ராஜேஸ்வரி, ஆவடி முன்னாள் பதிவாளர் மல்லிகேஸ்வரி ஆகியோர் மீதும் தொடர்ந்து இது போன்ற அரசுக்கு எதிரான நிலங்களை லஞ்சம் வாங்கிக் கொண்டு பதிவு செய்து வருவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்கின்றனர். பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். ஐ.ஏ.எஸ்.
ஆனால் கலெக்டர் பங்களாவின் ஒரு பகுதியை தனியாருக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் கதிரவனை கைது செய்யாமல் பணிநீக்கம் செய்தது தவறு அவரை நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அரசுக்கு எதிராகவும் பொதுமக்களின் நலனுக்கு எதிராகவும் செயல்படும் அதிகாரிகளை முச்சந்தியில் நிறுத்தி அவர்களை பொதுமக்கள் காரி உமிழ்ந்து செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்தினால் தான் இது போன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் திருந்துவார்கள் என்கிறார்கள் அறப்போர் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்.லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்வதை விட நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி நிரந்தர பணி நீக்கம் செய்தாலும் அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட போவதில்லை. லஞ்சம் வாங்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவர்கள் சம்பாதித்து வைத்திருக்கின்றனர். எனவே அவர்கள் சாப்பாட்டுக்கும் கஷ்டப்பட போவதில்லை. எனவே நிரந்தர பணி நீக்கம் செய்வது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்களுடைய சொத்துக்களையும் பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்கின்றனர் புதிய இந்தியாவை விரும்பும் இளைஞர்கள்.