chennireporters.com

டிஜிபி உத்தரவை மதிக்காத இன்ஸ்பெக்டர்.

இலங்கையைச் சேர்ந்த வசந்தி பிரியஸ் என்கிற பெண் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய சட்டத்திற்கு எதிராக திருவள்ளூரில் வசித்து வருவதாகவும் அவர் விபச்சாரம் செய்து வருவதாகவும் வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும்  உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பிய புகாரின் மீது இதுவரை திருவள்ளூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

கணவனை ஏமாற்றி ஏற்கனவே இலங்கையில் இரண்டு திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய பெண் குறித்து தமிழக காவல்துறையை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களுக்கு அபுதாபியில் இருந்து கார்த்திகேயன் என்பவர் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கடிதம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டி ருந்தார்.  இது தொடர்பாக திருவள்ளூர் எஸ்பி  செபாஸ் கல்யாண் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமல் என்பவர் ஏழு மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது தவிர கார்த்திகேயன் அம்மா திருவள்ளூர் மாவட்ட எஸ்பி செபாஸ் கல்யாண் அவர்களை சந்தித்து தனது பேத்திகளை காப்பாற்ற வேண்டும் ஒழுக்கமில்லாத எனது மருமகளால் குழந்தைகளின் வாழ்க்கை எதிர்காலம் பாழாகிவிடும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கார்த்திகேயன் டிஜிபிக்கு எழுதியிருந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக இலங்கையில் இரண்டு திருமணம் செய்துள்ளார். மூன்றாவதாக என்னை ஏமாற்றி துபாயில் திருமணம் செய்து கொண்டார். நான் திருவள்ளூருக்கு குடி பெயர்ந்த போது சில தினங்களிலேயே அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

எனக்கு தெரியாமல் பல ஆண்களுடன் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.  இந்த நிலையில் என்னிடம் இருந்து வெளியேறிய எனது மனைவி என்னுடைய குழந்தைகளை கூட எனக்கு காட்டாமல் தலைமறைவானார்.

திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் உடன் அவர் குடும்பம் நடத்தி வந்தார். இது தொடர்பாக நான் அவரை கேட்டபோது என்னை கூலிப்படையினர் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அதன் பிறகு நான் மீண்டும் வேலை நிமித்தமாக அபுதாபி சென்று விட்டேன். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் ஆயில் மில் அருகில் தையல் கடை நடத்தி வரும் எனது மனைவியை அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டியுள்ளனர்.

இலங்கைப்பெண் வசந்தியின் கள்ள காதலன் கமலக்கண்ணன்

அதனை விசாரித்த திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் வசந்தி உடன் பல ஆண்கள் தொடர்பில் இருந்தது கண்டு வசந்தியை கடுமையாக திட்டி எச்சரித்து அனுப்பினார். அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தன் மீது வழக்கு தொடுத்துள்ள வசந்தி பணம் பெறுவதற்காக அதாவது மெயின்டனன்ஸ் பெறுவதற்காக இவரே கூலிப்படையினரை தயார் செய்து எனது தம்பிகள் வெட்டியதைப் போல ஒரு பொய் புகார் கொடுத்துள்ளார் என நான் அறிகிறேன்.

ஆனால் அவரை வெட்டியது யார் என்ற விவரத்தை இதுவரை போலீசார் விசாரிக்காமல் போனதன் மர்மம் என்ன என்பதை இதுவரை தெரியவில்லை. இதன்பிறகு நான் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு அளித்த புகார் கடித்ததின் மீது  இதுவரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மனைவி வசந்தி இந்திய சட்டத்திற்கு புறம்பாக பாஸ்போர்ட் காலாவதி ஆகி சட்டத்திற்கு புறம்பாக தங்கி உள்ளார்.  அடிக்கடி வீட்டையும் மாற்றி வருகிறார். அது தவிர விபச்சாரமும் செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை நான் முன்வைத்தும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை மாவட்ட போலீசார் தெரிவிக்க வேண்டும்.

கார்த்தியின் புகார் மீது திருவள்ளூர் மாவட்ட கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவர் சட்டத்திற்கு புறம்பாக தங்கி உள்ளார் என்றும் அவருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவும் இல்லாதது  குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்து  உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டனர்.  இருந்த போதிலும் இலங்கை பெண் வசந்தி  மீது மாவட்ட காவல் துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது

எனவே தயவு கூர்ந்து மாவட்ட எஸ்பி செபாஸ் கல்யாண் அவர்கள் என் புகார் மீது உரிய விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒரு கடிதத்தை காவல்துறை தலைமை இயக்குனருக்கு புகாராக அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க.!