அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா. திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார் வாழ்த்து.

November 27, 2023

By இரா. தேவேந்திரன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் தமிழக இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் பொருளாளர் நரேஷ் அவர்கள் தனது வாழ்த்தை மடல் ஆக்கி அமைச்சர் உதயநிதிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

 💐 நவம்பர் 27 இளைய சூரியன் உதித்த நாள் 💐.

நவம்பர் 27-ல் பிறந்த நாயகனே.!! நாடு போற்றும் எங்கள் இளைய சூரியனே..!!

அடுத்த ஆண்டு நவம்பர் 27-ல் நீங்கள் அறியனை ஏற வேண்டும்..  நாங்கள் அதை காண வேண்டும்..!!

ஒற்றை செங்கல்லில் தாமரை கோட்டையை தவிடு பொடி ஆக்கியவன் நீ..

தங்க மகன் எங்கள் தளபதி பெற்றெடுத்த எங்கள் தவப்புதல்வன்..

அனிதாவுக்கு அண்ணனாய் ,
அறம் காக்கும் கண்ணனாய்..  இளைஞர்களுக்கு மன்னனாய் இருப்பவர் நீ.. எங்களுக்கும் நீ அண்ணனாய்.

நீட்டை எதிர்த்து நீதியைப் பெற கொள்கை முழக்கம் இட்டவனே.. எங்கள் இளைய சூரியனே.!!

சனாதனத்தை ஒழிக்க சங்க நாதம் இட்டவனே..

எத்திசையும் இளையவரின் புகழ் ஒலிக்கும்.

எங்கும் நம் மன்னரின் பெயர் ஒளிக்கும்.!!

பாசிச கூட்டப் படை நடுங்குது..!!
எடப்பாடி அணி கூட தொடை நடுங்குது..

எதிரணியின் குலை நடுங்குது.. அண்ணாமலையின் டவுசர் கூட அவிழப்போகுது..!!

மோடியின் முகமூடி கூட கிழிய போகுது.!!

அது நம் இளையவரின் முன்னாடி மண்டியிடும் நாள் விரைவில் வரப்போகுது..!!

நம் மாமன்னன் மகுடம் சூடும் நாள் வரப்போகுது.!!

அது அடுத்த ஆண்டு நவம்பர் 27 என்று நாடு அறிய போகுது.!!

தலைவா வாழ்க நீ பல்லாண்டு, பல்லாண்டு..இவன்

நரேஷ்குமார் மத்திய மாவட்ட பொருளாளர்.

திருவள்ளூர்.

Share:

இரா. தேவேந்திரன்.

November 27, 2023

Leave a Comment