ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தனித் தீர்மானம் நிறைவேற்றம்.

April 10, 2023

By சிவனேஷ். சிவா

ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அவை முன்னவர் துரைமுருகன் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். சட்டப்பேரவை விதிகளில் உள்ள ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்தி வைப்பது தொடர்பாக தீர்மானம் பேரவையில் கொண்டுவரப்பட்டது.

 

இதன்படி ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முனைவர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து பேரவையின் கதவுகள் மூடப்பட்டு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவையில் இருந்த 146 உறுப்பினர்களின் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக உறுப்பினர்கள் இரண்டு பேர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனை தொடர்ந்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அமைச்சரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆறு என்றது ஒப்புதல் அளித்துள்ளார். திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்தைக் கண்டு ஆளுநர் ரவி நடுக்கம் அடைந்துள்ளார் என்றே சொல்லலாம்.

Share:

சிவனேஷ். சிவா

April 10, 2023

Leave a Comment