அக்டோபர் இரண்டாம் தேதி இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை குறிக்கும் நாளாகும்.
ஐக்கிய நாடு பொது சபையில் ஜூன் 15ம் தேதி 2007 இல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் படி இந்த நாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர்காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல தமிழக அரசின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கவர்னர் ரவியும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் காந்தியின் பிறந்த நாளை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்னர்.