லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலத்தையும் அதற்கு சொந்தமான மூன்று கடைகளையும் போலி ஆவணம் மூலம் பதிவு செய்த ஆவடி பதிவாளர்.
ஆவடி சின்னம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன்.
அந்தப் பகுதியில் உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோவிலின் மேனேஜிங் டிரஸ்டியாக செயல்பட்டு வருகிறார்.
கோயில் நிர்வாகி சரவணன்.
ஹரே கிருஷ்ணா சேவா ட்ரஸ்டின் நிறுவனரும் நிரந்தர மேனேஜிங் டிரஸ்டியுமான சரவணன் அவர்களுக்கு செட்டில்மெண்ட் செய்யப்பட்ட நிலத்தில் ஹரே கிருஷ்ணா திருக்கோவில் அமைந்திருக்கிறது.
சரவணன் அவர்கள் கணக்கு வழக்குகளை கேட்ட பொழுது , கணக்கு வழக்குகளை ஒப்படைக்காமலும் , டிரஸ்டிர்க்கு சொந்தமான மூன்று கடைகளையும் போலியான ஆவணத்தின் மூலம் ஆறு லட்ச ரூபாய்க்கு லீசுக்கு விட்டு பணத்தையும் , அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் எடுத்து சென்று விட்டனர்.
வெங்கடேசன்.
இந்த நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து ஹரே கிருஷ்ணா சேவா டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டியான சரவணன் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை முன்னாள் நிர்வாக உறுப்பினர்களாக இருந்த டாக்டர் ஜெயபால், வெங்கடேசன், விஸ்வநாதன் , வெங்கடேசனின் மகனான விக்னேஷ், ஏகாம்பரம், மனோகர், வெங்கட்ராமன், சுப்பிரமணி மற்றும் சிலர் சேர்ந்து போலியாக ஒரு தீர்மானத்தை போட்டு, போலி கையெழுத்துகளையும் போட்டு அதன் மூலம் கோயில் நிர்வாகி சரவணன் அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக காண்பித்துள்ளனர்.
டாக்டர் ஜெயபால்.
இந்த நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சரவணன் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகேஸ்வரி ஆவணங்களை சரி பார்த்து பதிவு செய்ய முடிவு செய்தார்.
மல்லிகேஸ்வரி.
அடுத்த நாள் மல்லிகேஸ்வரி விடுமுறையில் சென்றார். அடுத்த நாள் பதிவாளர் பொறுப்பு வகித்த பதிவாளர் ராஜசேகர் என்பவர் நிலத்தின் உரிமையாளர் சரவணன் இல்லாமல் பத்திரத்தை பதிவு செய்துள்ளார்.
ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் நடப்பில் இருக்கும் பொழுது அதனை ரத்து செய்யாமல் எந்த ஒரு ஆவணத்தையும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற விதி உள்ளது.
அந்த விதியை கடைபிடிக்காமல் மேலும் எந்த ஒரு சட்டபூர்வமான விதிமுறைகளை பின்பற்றாமலும் மல்லிகேஸ்வரியும், ராஜசேகரும் மேற்படி நபர்கள் மூலம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மேற்படி இடத்தை ஹரே கிருஷ்ணா பக்த ஜன டிரஸ்ட் என்ற பெயரில் முன்னாள் உறுப்பினர் வெங்கடேசன் பெயரில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் சரவணன் அவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
விஸ்வநாதன்.
இது தவிர பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி, ராஜசேகர் மீது தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமி பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஆகியோருக்கு எழுத்து பூர்வமாக புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஏகாம்பரம்.
ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய பல இடங்களை ஆதாயம் தேடும் நோக்கில் பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி பல இடங்களை நீதிமன்ற உத்தரவை மீறி ஆதாயம் பெறும் வகையில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
விக்னேஷ்.
சில தினங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மல்லிகேஸ்வரி லஞ்சம் பெற்றுக் கொண்டு போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தின் உரிமையாளர் இல்லாமலேயே நிலத்தை பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மனோகர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பூதாகரமாக பல இடங்களை அவர் பத்திரப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையும் பத்திரப்பதிவுத்துறை தலைவரும் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தி குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தால் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.