chennireporters.com

#dsp promotion டிஎஸ்பி பதவி உயர்வு பட்டியலில் ரூ.85 லட்சத்தை மூட்டை கட்டிய டி.ஜி.பி. அலுவலக வசூல் ராஜா ரவிச்சந்திரன்..

டிஎஸ்பி பதவி உயர்வு பட்டியலில் ரூ.85 லட்சத்தை மூட்டை கட்டிய டி.ஜி.பி. அலுவலக வசூல் ராஜா ரவி என்கிற ரவிச்சந்திரன். இவரை உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலிசார் கைது செய்து அவரது வீட்டை சோதனை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

பதவி உயர்வு பட்­டி­யலை தயா­ரி­த்து மேல் அதிகாரிக்கு புட்அப் செய்ய லட்­சக்­க­ணக்கில் வசூல் செய்யும் டிஜிபி அலு­வ­­லக பிஏ ரவி  பற்­றி பல  தக­வல்­களை டிஜிபி அலு­­வ­­லக காக்­கிகள் கண்ணீர் மல்க கூறி வருகின்­ற­னர்.

டிஜிபி ஆபிஸ் முதுநிலை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன்.

1997ம் ஆண்டு நேரடி சப் இன்ஸ்பெக்­டர்­க­ளாக வேலைக்கு சேர்ந்து 2007 – 2008ம் ஆண்டு இன்ஸ்­பெக்­ட­ராக ஒரே ஒரு பதவி உயர்வு மட்­டுமே பெற்று கடந்த 27 ஆண்டுகளாக  பதவி உயர்வு இல்லாமல் இருந்து  பணியாற்றி வரும் நிலையில்  மன வருத்தப்படும் வகையில் சமீபத்திய டிஎஸ்பி பதவி உயர்வுகள் அமைந்துள்ளது என மனக்குமுறள்களுடன் சொல்லுகின்றனர்.

இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் இவ்வளவு காலம் காத்திருந்து சுமார் 4 மாத காலம் இவர்களின் பதவி உயர்வுக்கான பரிந்துரை கோப்பு உள்துறை நிதித்துறை என பல்வேறு படிநிலைகளை தாண்டி சுமார் 68 தகுதி வாய்ந்த ஆய்வாளர்களுக்கு வழங்க காவல் இயக்குனர் அவர்களால் பரிந்துரைத்தும் இறுதியில் 57 ஆய்வாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது.

11 ஆய்வாளர்களை வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்­ள­னர். இது குறித்து விசாரித்ததில் தலைமையகத்தில் ரவிச்சந்திரன் பிஏ வின் கைவண்ணம் தான் இந்த 11 ஆய்வாளர்கள் புறக்கணிப்பு என புலம்­பு­கின்­ற­னர்.  ரவிச்சந்திரன் கடந்த 15 வருடங்களாக சென்னை டிஜிபி ஆபிசில் SAO வாக பணியாற்றி வருகிறார். ­ர­வியை யாரெல்லாம் வெகுவாக கவனிக்கிறார்களோ அவர்களின் பெயரை மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற செய்வதும் தண்டனை பட்டியலில் பெயர் இருந்தாலும் ரவியை சந்­தித்து தலைக்கு ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம்  வரை கவனித்தால் அனைத்து தண்டனைகளையும் தவிடு பொடியாக்கி பதவி உயர்வு பட்டியலில் சேர்த்துவிடுவார் இந்த யோக்கிய சிகாமனி ரவிச்­சந்­திரன். பணம் தராதவர்களை ஏதேனும் காரணம் காட்டி பட்டியலிலிருந்து நீக்கிவிடுவார் இந்த நாமம் நல்லவர்.

டிஜிபி ஆபிஸ் முதுநிலை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன்.

அதைப்போலவே சுமார் 100 டிஎஸ்பி பதவிகள் காலியாக உள்ளதை மறைத்து அதிலும் 68 பதவிகளுக்கு நிதித்துறை உள்துறை அனுமதியளித்தும்  ரவிக்கு கட்டிங் தரவில்லை என்ற ஒரே நோக்கத்திற்காக அனுமதியளித்த உத்தரவை மாற்றி அமைத்து 57 ஆக ஆக்கி 11 ஆய்வாளர்களை பட்டியலிலிருந்து நீக்கியுள்­ளார்.

இதற்கான ஒரே சாட்சி அடுத்த நாளே 37 டிஎஸ்பிக்களுக்கு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர் போன்ற கருப்பு ஆடுகள் டிஜிபி அலு­வ­ல­கத்தில் இருப்பது உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லையா அல்­லது தெரிந்தும் தெரி­யா­தது போல நடிக்கிறார்­களா என்­பது தெரியவில்லை.

டிஜிபி சங்கர் ஜுவால்.

விஷ­யம் என்னவென்றால் இவ்வளவு காலம் காத்திருந்து சுமார் 4 மாத காலம் இவர்களின் பதவி உயர்வுக்கான பரிந்துரை கோப்பு உள்துறை நிதித்துறை என பல்வேறு படிநிலைகளை தாண்டி சுமார் 68 தகுதி வாய்ந்த ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க காவல் தலைமை இயக்குனர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டும் இறுதியில் 57 ஆய்வாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 11 ஆய்வாளர்களை வேண்டுமென்றே பழி வாங்கும் நோக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்­ள­னனர்.

இது குறித்து விசாரித்ததில் தலைமையகத்தில் ரவிச்சந்திரன் பி ஏ வின் கைவண்ணம் தான் இந்த 11 ஆய்வாளர்கள் புறக்கணிப்பு என தெரியவருகிறது. இவரை யாரெல்லாம் வெகுவாக கவனிக்கிறர்களோ அவர்களின் பெயரை மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற செய்வதும் தண்டனை பட்டியலில் பெயர் இருந்தாலும் இவரை கவனித்தால் அனைத்து தண்டனைகளையும் தவிடு பொடியாக்கி பதவி உயர்வு பட்டியலில் சேர்த்துவிடுவார் பணம் தராதவர்களை ஏதேனும் காரணம் காட்டி பட்டியலிலிருந்து நீக்கிவிடுவார்.

டிஜிபி ஆபிஸ் முதுநிலை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன்.

அதைப்போலவே சுமார் 100 டி எஸ்பி பதவிகள் காலியாக உள்ளதை மறைத்து அதிலும் 68 பதவிகளுக்கு நிதித்துறை உள்துறை அனுமதியளித்தும் பணம் கொடுக்கவில்லை என்ற ஒரே நோக்கத்திற்காக அனுமதியலித்த உத்திரவை மாற்றி அமைத்து 57 ஆக 11 ஆய்வாளர்களை பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாக குற்றம் காட்டுகின்றனர். இதற்கான ஒரே சாட்சி அடுத்த நாளே 37 டிஎஸ்பிக்களுக்கு ஏடி எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர் போன்ற கருப்பு ஆடுகள் இருப்பது உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லையா அ அவர்களுக்கும் இதில் ஏதேனும் பங்கு உள்ளதா என காவல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரவிச்சந்திரனுக்கு வரும் கட்­டிங்கில் டிஜிபி அலுவலகத்தில்  ­உள்ளஒரு ­ஐ­பிஎஸ் அதி­கா­ரிக்கு பங்கு தரு­வதாகவும் அதனால் தான்  ரவி மீது எந்த புகார் வந்­தாலும் அவரை அந்த அதிகாரி காப்­பாற்றி விடு­கி­றா­ராம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரக்கானம் விஷ சாராயம் குடித்து இறந்து போனவர்கள் வழக்கில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட  துரைப்பாண்டி  என்ற டிஎஸ்பியிடம்   10 லட்சத்திற்கு மேல் பணம் வாங்கிக் கொண்டு சென்னை ராயப்பேட்டை ஏசியாக பதவி வழங்க ரவிச்சந்திரன் அரும் பாடு பட்டதாக கூறப்படுகிறது.

டிஜிபி சங்கர் ஜுவால்.

ரவியின் சொத்து மதிப்பு மட்டும்  மட்டும் சுமார் ஒரு 60 கோடியை தாண்டும் என்கின்றனர். நேர்மையின் சிகரம் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காகவே கடவுள் படைக்கப்பட்ட பிறவியாக சொல்லிக் கொண்ட சைலேந்திரபாபு இருந்த காலத்தில்  இவர் ஆடிய ஆட்டம் பயப்படு பயங்கரம் அப்போது இவர் சுருட்டிய பணம் பல கோடி என்கின்றனர் டிஜிபி அலுவலக உளவுத்துறை அதிகாரிகள்.

பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ரவி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து அவர் வீடு மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் இவரைப் போன்று மீதமுள்ள அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பதவி உயர்வு கிடைக்காத அதிகாரிகள்.

போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்வு விஷயத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முதுநிலை நிர்வாக அதிகாரி எஸ் ஏ ஓ ரவிச்சந்திரன் இது குறித்து அவரது கருத்தை தெரிவித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

 

இதையும் படிங்க.!