chennireporters.com

கோவையில் பத்திரிகையாளர் வீடு புகுந்து பா.ஜ.க.நிர்வாகிகள் கொலைவெறி தாக்குதல். நடவடிக்கை எடுக்காத போலீஸ்.

சொத்து பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்துக்கு உடன்படாததால் கோவை பத்திரிகையாளர் பூபதியின் வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் மீது கோவை -மதுக்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து 8 நாட்களுக்கு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் சொத்துக்காக கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டி தமிழக முதல்வர் தனிப்பிரிவு, கோவை கலெக்டர் சமீரன், கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம், பேரூர் டி.எஸ்.பி திருமால், கோவை சரக ஐ.ஜி சுதாகர், டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோரிடம் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் ரங்கசாமிக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் 8 ஆண்டுகளாக தெய்வானை மற்றும் அவரது மகனும் வசித்து வருகின்றனர்.

ரங்கசாமி வாரிசுதாரர்களாக மொத்தம் 9 பேர் உள்ளனர்.இதில் 7 பேர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.இந்த சொத்து மற்றும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அனைத்தும் ரங்கசாமி பெயரில் இன்னும் உள்ளது.

இந்த சொத்து பிரச்சினையில் நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவரும் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ பொதுச்செயலாளர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி தொடர்ந்து தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தார்.

நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசி பிரியா

இறுதியாக நீதிமன்றத்தில் தங்களுக்கும் தங்கள் உறவினர்களும் இடையில் உள்ள சொத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொள்வதாக வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து பேசிய பா.ஜ நிர்வாகியிடம் பத்திரிகையாளர் பூபதி மற்றும் அவரது தாய் தெய்வானை தெளிவாக தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ நிர்வாகி, குடிநீர், மின் இணைப்பை 5-9-2021 ல் தெய்வானை அண்ணன் நாச்சிமுத்து மனைவி கார்த்திகேயனி மற்றும் கார்த்திகேயனி மருமகன் வடிவேல், செல்வக்குமார் உள்ளிட்டோரிடம் கூறி துண்டிக்க செய்தார்.

இதுதொடர்பாக மின் இணைப்பு வேண்டி பாலத்துறை மின்வாரியத்திற்கும், குடிநீர் குழாய் உடைப்பு குறித்து பஞ்சாயத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட கார்த்திகேயனி உள்ளிட்ட நபர்கள் சொத்து பிரச்சினையில் தங்கள் சொல்படி நடக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தெய்வானை, பூபதி ஆகியோரை தினசரி வீட்டுக்கு வந்து பா.ஜ நிர்வாகிகளின் ஆட்கள் டார்ச்சர் செய்தும் மிரட்டியும் வந்தனர்.

மேலும் பா.ஜ நிர்வாகி தூண்டுதல் பேரில் உறவினர்கள் மதுக்கரை காவல்துறையில் 17-9-21 ல் புகார் அளித்தனர்.நீதிமன்றத்தை அணுகி, மேற்கண்ட சொத்து வழக்கில் தீர்வு பெற்று கொள்வதாக இருதரப்பிலும் மனு தரப்பட்டது.

மனு அளித்து விட்டு வெளியில் வரும்போது ஸ்டேசன் வாசலில் கார்த்திகேயனி உள்ளிட்ட 12 பேர் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் உறவினர்கள் 8 பேர் மற்றும் கில்மோர், ரமேஸ், நாச்சிபாளையம் பஞ்சாயத்து தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி, பா.ஜ நிர்வாகி சந்திரசேகர், நாச்சிபாளையம் புரோக்கர் பிரகாஷ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ரவுடிகள் 27-9-2021.

அன்று இரவு 8 மணியளவில், நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள 64 வயது மூதாட்டி தெய்வானை வீட்டுக்குள் புகுந்து கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். பத்திரிகையாளர் பூபதியிடம் 2 போன்களை பிடுங்கி கொண்டனர்.

நீ பத்திரிகையில் வேலை செய்தால் நீ என்ன செய்ய முடியும் என்றும் தன் சாதி பெயரை சொல்லி திட்டியும் ரீப்பர் கட்டை, இரும்பு பைப்பால் அடித்து தாக்கினர்.

இதுதொடர்பாக கோவை எஸ்.பி அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெறும் போதே தொலைபேசியில் புகார் அளித்ததன் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு மதுக்கரை ஆய்வாளர் வைரம் நேரில் விசாரணை செய்தார்.

காயமடைந்த பத்திரிகையாளர் ஆர்.கே.பூபதி, அவரது தாய் தெய்வானை மருத்துவ மனையில் சேர்ந்தனர்.இதுவரை மதுக்கரை போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்து கைது நடவடிக்கை எடுக்காத நிலையில்,

“எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நாச்சிபாளையம் பஞ்சாயத்து ( பாரதிய ஜனதா கட்சி) தலைவி சசிபிரியா கணவர் அப்பு என்கிற கிருஷ்ணசாமி கும்பலும், கில்மோர், ரமேஷ் உள்ளிட்ட நபர்களும் மற்றும் உறவினர்கள் 8 பேருமே பொறுப்பு என்று மீண்டும் ஒரு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கும் பத்திரிகையாளர் பூபதியும் அவரது தாயும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை கலெக்டர் சமீரன், மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு மனு தரப்பட்டுள்ளது.

இரவு 8 மணியளவில் கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது.நிரூபணமான நிலையில் 8 நாட்களாக பா.ஜ நிர்வாகிகள் மீதும் தூண்டுதலாக இருந்த உறவினர்கள் மீது மதுக்கரை போலீசார் கைது செய்யாதது ஏன்?

மருத்துவமனையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பெற்ற நிலையில் மதுக்கரை போலீசார் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் மேற்கண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை மெத்தனம் குறித்து தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவை தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதல்வர் நேரடி கவனத்திற்கும் சென்னை பத்திரிகையாளர்கள் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர்.பத்திரிகையாளர் பாதுகாப்பு விவகாரம் தமிழகத்தில் கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க.!