பிபின் ராவத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்.

December 10, 2021

By தே. ராதிகா

முப்படை தலைமை தளபதி விபின் ராவத்திற்கு நாடே அஞ்சலி செலுத்திவருகிறது.விபத்து நடந்த நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கடையை அடைத்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தில்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தலைமை மார்ஷல் வி.ஆர். செளத்ரி, கடற்படை தலைமை அட்மிரல் ஹரி குமார் உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்கள், இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.17 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Share:

தே. ராதிகா

December 10, 2021

Leave a Comment