திரைப்பட நடிகர் மாரிமுத்து செப்.8 தேதி காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தவர் இவர்.சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைரலானது ஆகின.இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் இன்று 8 ம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.சமீபத்தில் அவரது பேட்டிகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இறப்புச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்துவின் இழப்பை தாங்க முடியாத அவரது நண்பர்கள் உறவினர்கள் அவருடன் நெருங்கிய பழகிய நடிகர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.மனித வாழ்வின் எதார்த்தத்தை பல தொலைக்காட்சி பேட்டிகளில் வெளிப்படையாக பேசியவர். ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு பேசிய மாரிமுத்து இந்திய வளர்ச்சிக்கு இவர்களின் பிற்போக்குத்தனமே காரணம் என வெளிப்படையாக பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் வைக்கும் கருத்துக்களை திறந்த மனதுடனும் வெளிப்படையாகவும் பேசும் எண்ணம் கொண்டவர் நடிகர் மாரிமுத்து என சொல்கின்றனர் அவரது நண்பர்கள்.