மோசடி புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் நேற்று சேலம் மாநகர போலீசாரால் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக பல்கலைகழக துனை வேந்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணைவேந்தர் ஜெகநாதன்.
இவர் ஏற்கனவே தமிழ் கவர்னர் ரவி இவரை துணைவேந்தராக நியமித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர பெரியார் பற்றிய புத்தகம் எழுதிய பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ததும் இந்த மோசடி பேர்வழி ஜெகநாதன் தான். இந்த துனை வேந்தர் ஜெகநாதனுக்கும் இவரை பணியமத்திய கவர்னர் ஆளுநர் ரவிக்கும் தொடர்பு இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் குற்றம் சாட்டியும் ஜெகநாதனுக்கும் ஆளுநர் ரவிக்கும் எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.ஜார்கண்ட் கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. சி பி ராதாகிருஷ்ணனும் ஜெகநாதனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.இவர் ஏற்கனவே டபுள் டி ஏ மற்றும் பதிவாளர் தேர்வாணையர் பதவிகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு என்றும் பல புகார்கள் இவர் மீது கூறப்படுகிறது. போலீசார் இவரை காவலில் எடுத்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.