கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் செல்லும் பாதையில் மலை கற்கள் சரிந்து விழுந்துள்ளது.அதேபோல பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளத்தில் சிக்கிய ஒருவரை மீட்க முடியாமல் பக்தர்கள் கதறும் காட்சி பார்ப்பவர்கள் மனதை நெஞ்சை பதர வைக்கிறது.
வெளியூரில் இருந்து திருப்பதிக்கு பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் வரவேண்டாம் என்று ஆந்திர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அதுதவிர அங்குள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு தகவல் சொல்லி வருகின்றனர்.
திருப்பதி இயல்பு நிலைக்கு திரும்ப அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
எந்த ஒரு பேரிழப்பு நடக்காத வகையில் அந்த ஏழுமலையான் தான் காப்பாற்ற வேண்டும் என்று பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.