chennireporters.com

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உள்துறை செயலாளர் ஆனார் அமுதா.

தமிழக அரசில் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இது தொடர்பாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டின் படி இன்று தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமிக்கும் அதன் செயலாளர் அமுதாவுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது.

உதயச்சந்திரன்.

இந்த நிலையில் அமுதா உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளுக்குள் இந்த பணி மாறுதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்.

ககன்தீப் சிங் பேடி.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்.

ராதாகிருஷ்ணன்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்.

போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம். சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்.

பனிந்தர் ரெட்டி.

சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்.

இதையும் படிங்க.!