chennireporters.com

#Violation in taking soil தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு மண் எடுப்பதில் விதிமீறல் கள்ளச் சந்தையில் விற்பனை பொதுமக்கள் போராட்டம்.

திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிக்கு மண் எடுப்பதில் விதிமீறல் நடப்பதாகவும் மேலும் கள்ளச்சந்தையில் விற்கபடுவதாகவும் அந்த கிராம பொதுமக்கள்  கலெக்டரிடம்   புகார் அளித்துள்ளனர் இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தில் சர்வே எண்.598, 599-ல் அமைந்துள்ள ஏரியில்   தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்காக மண் எடுக்க கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் குவாரி  நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு சுமார் 150 நடைக்கு மேல் கனரக லாரியில் மண் எடுக்கப்படுகிறது. இதுவரை தோராயமாக 2500 லோடுகளுக்கு மேல் மண் ஓவர் லோடாகவும், பர்தாக்கல் மூடப்படாமலும் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த மண்ணை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு நடை ரசீது இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைப் பணியை தவிர்த்து கள்ளச் சந்தையில் தனி நபர்களுக்கு பல ஈயிரம் ரூபாய்க்கு  பல லோடு மண் விற்கப்படுகிறது.

இது சம்மந்தமாக நேரில் சென்று பார்வையிட்டதில் அரசு விதிமுறைப்படி 0.90 மீட்டர் (3 அடி) ஆழம் எடுக்க வேண்டும். இதற்கு மாறாக சுமார் 6 அடிக்கு மேல் ஆழம் எடுக்கப்பட்டுள்ளது. நீளமும், அகலமும் குறிப்பிட்ட அளவுபடி இல்லாமல் அதிக அளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி நேரிலும் 8-ஆம் தேதி பதிவு தபால் மூலமாகவும் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மண் குவாரி விதிமுறைகளை மீறி தவறுகள் நடை பெறுவதால், இதன் அனுமதியை ரத்து செய்யும்படி பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டத்திற்கு புறம்பாக மண் அள்ளப்படுவதை கண்டித்து கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் திருவள்ளூர் உட்கோட்ட நடுவர் வருவாய் கோட்ட அலுவலர் கற்பகம் ஒரு அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது குற்றவியல் நடைமுறை சட்டம் 107 திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவூர் குறுவட்டம் தொழுவூர் கிராமம் திருவள்ளூர் புறவழி சாலை வேப்பம்பட்டு புறவழி சாலை தொழுவூர் ஏரியில் சாதாரண மண் எடுப்பதை தடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த உத்தேசித்தது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 107 நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவிடுதல் தொடர்பாக.

திருவள்ளூர் புறவழி சாலை வேப்பம்பட்டு புறவழி சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு சிறப்பு நிபந்தனைகளுடன் தொழுவூர் ஏரியிலிருந்து சாதாரண மண்ணை எடுத்து பயன்படுத்த இ கே கே இன் பாஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்படி  திட்ட பணிக்காக கடந்த 8.3. 2024ஆம் தேதி சவுண்டு மண் எடுக்க சுத்தம் செய்த போது தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்கள் சேர்ந்து பணியினை செய்யவிடாமல் தடுத்ததால் செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது தங்கள் ஊர் ஏரியில் சவுண்டு மண் எடுத்தால் நீர்நிலை பாதிக்கப்படும் என பிரச்சனை செய்ததால் வேலை நிறுத்தப்பட்டது.

மேலும் கடந்த 8.3. 2024 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சப் காண்ட்ராக்டர் எஸ் ஏ ஆர் எண்டர்பிரைசஸ் ஈஸ்ட் தாம்பரம் என்ற நிறுவனத்தின் மேலாளர் ஜம்புலிங்கம் என்பவர் தனது நிறுவனத்தை சேர்ந்த ஹிட்டாச்சி வண்டியின் மூலம் தொழுவூர் ஏரியில் சவுடு மண் எடுக்க சுத்தம் செய்த போது தங்களை வழிமறித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பணி செய்ய தனக்கு பாதுகாப்பு வழங்கமாறு 12 .3. 2024 ஆம் தேதி செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது சி.எஸ்ஆர் நம்பர் 196 வழங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி அரசாணையின்படி மீண்டும் தொழுவூர் கிராம ஏரியில் புறவழிச்சாலை பணிக்காக சவுண்டு மண் எடுக்கும் பணி தொடங்குமேயானால் மார்ஜினில் கண்ட நபர்கள் பிரச்சனை செய்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் மார்ஜினில் கண்ட நபர்கள் தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொது அமைதிக்கு பங்கமும் குந்தகமும் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இப்பகுதியில் இயல்புநிலை தொடர்ந்திட இதன் மார்ஜினில் கண்ட நபர்களை அழைத்து உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி சட்டப்பிரிவு 107 குற்றவியல் நடைமுறை சட்டம் படி விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆய்வாளர் செவ்வாபேட்டை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்படி கிராமத்தில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் திருவள்ளூர் தனது விசாரணை அறிக்கினை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

தொழுவூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு சர்வே எண் 598/1பி மொத்த பரப்பளவு 44.38.5 ஹெக்டேர்ஸ் நீர்வளத்துறை ஏரியிலிருந்து சாதாரண மண்ணை குவாரி செய்து கொள்ள இ கே கே இன் பாஸ்ட்ரக்ச்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் ஆணை நகல் எண் 28/2023 கனிமம் 2 நாள் 26.2.2024 இன் படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி அனுமதி வரப்பெற்றதைத் தொடர்ந்து கடந்த எட்டாம் தேதி அன்று சுமார் மாலை 5 மணி அளவில் குவாரி செய்யும் பணிக்காக வந்த ஹிட்டாச்சி வண்டியினை தொழுவோர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர் வழிமறித்து வேலையினை தொடர விடாமல் பிரச்சனை செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் குவாரி எடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து கலைந்து சென்றனர். மேலும் மேற்படி நபர்கள் தொடர்ந்து தொழுவூர் ஏரியிலிருந்து குவாரி செய்யும் பணியினை தடுக்க முயற்சி செய்து வருவதால் தொழுவூர் கிராமத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாக கிராம விசாரணையில் தெரிய வருகிறது. என தாசில்தார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேற்படி பார்வையில் காணும் அறிக்கை வரப்பற்றதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு விசாரணைக்கு கடந்த 12ஆம் தேதி மேற்கண்ட நபர்களுக்கு ஆஜராக மாறு அழைப்பானை அனுப்பப்பட்டு 13ஆம் தேதி காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

ரகுபதி,திருமலை, சுகுமார், நாகராஜன், எழிலரசன், பத்மநாபன் மேற்படி நபர்கள் விசாரணைக்கு ஆஜராகி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் நடைபெறும் திருவள்ளூர் வேப்பம்பட்டு புறவழி சாலை தேசிய நெடுஞ்சாலை  திருப்பதி திருத்தணி சென்னை மார்க்கத்தில் பணிக்கு தொழுவூர் ஏரியிலிருந்து சாதாரண மண்ணை குவாரி செய்து கொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டு சாதாரண மண் எடுப்பதை தடுக்க மாட்டோம் என மேற்படி நபர்கள் உறுதியளித்துள்ளனர்.

எனவே திருவள்ளூர் மாவட்டம்  தொழுவூர் கிராமத்தில் சாதாரண மண்ணை குவாரி செய்து கொள்ள எந்தவித இடையூறும் செய்யக்கூடாது எனவும் மேற்படி அரசாணை மேற்படி அரசுப் பணிகளையும் திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் இடையூறு செய்து மேற்படி கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என மேற்கண்டவாறு விசாரணைக்கு ஆஜராகிய நபர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இவர்களால் மேற்படி கிராமத்தில் அரசு பணியினை தடுக்க முற்படும் பட்சத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் பொது அமைதியை குறைக்கும் விதத்தில் பிறரை தூண்டிவிட நேரம் பட்சத்தில் அவர்கள் மீதும் காவல்துறையின் மூலம் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என இவ்வாறு திருவள்ளுவர் ஆர்டிஓ கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டாத அரசு அதிகாரிகள் தனியார் முதலாளிகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் தொழுவூர் கிராம மக்கள். சாதாரணமாக ஒரு குவாரியை தனிநபருக்கு அனுமதி அளிக்கும் பொழுது குறிப்பிட்ட அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் மண் எடுக்க வேண்டும் என்று விதிமுறை வகுத்து அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆனால் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு மண் எடுக்க அனுமதிக்கும் பொழுது மேற்கண்ட சட்ட விதிமுறைகள் இவர்களுக்கு பொருந்தாதா? என கேள்வி எழுப்புகின்றனர்.  ஆர்டிஓ கற்பகம் அம்மையார் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த பணி உரிமையாளருக்கு விசுவாசமாக நடந்து கொள்வது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

இதையும் படிங்க.!