chennireporters.com

கொரோனா தடுப்பூசியை கள்ள சந்தையில் விற்ற இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது.

எஸ்.பி. ஜெயகுமார்.

கடந்த 13.05.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உடப்பட்ட கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ரெம் டெசிவர் மருந்து மருந்துகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் கோவில்பட்டி காந்தி நகர் நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றினர் மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் மேற்படி குப்பிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் கோவில்பட்டி சண்முகம் மற்றும் அவரது சகோதரர் கணேசன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!