chennireporters.com

விஞ்ஞானி வீர முத்துவேலின் தந்தை நெகிழ்ச்சி ஜெயிச்சிட்ட” மாறா”

சந்திரயான் -3 திட்டத்தின் ஆட்ட நாயகன் விழுப்புரம் வீரமுத்துவேல் செய்த சாதனை உலகளவில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர் இன்று மாலை தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் பற்றி பார்க்கலாம்.

நிலவின் தென் துருவம் என்பதை மிக முக்கிய பகுதியாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நிலவின் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உலக நாடுகள் முயற்சி செய்துவரும் நிலையில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகமே உற்றுநோக்கும் தருணத்தில் இன்று சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானி.

சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1976- ஆம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிறந்தார். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர் பாலிடெக்னிக்கில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். 2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்காற்றினார், அப்போது திட்டத்தின் நாசா உடனான ஒருங்கிணைப்பை முற்றிலுமாக வீரமுத்துவேல் ஏற்றுக்கொண்டிருந்தார். 2016 ஆம் ஆண்டில், வீரமுத்துவேல். விண்கலத்தின் மின்னணுப் பொதியில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை குறித்த தனது கட்டுரையை வழங்கினார். அவரது ஆய்வு கட்டுரை குறித்து பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைகோள் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதுவே வீரமுத்துவேலை 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்காற்றினார், அப்போது திட்டத்தின் நாசா உடனான ஒருங்கிணைப்பை முற்றிலுமாக வீரமுத்துவேல் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இவரது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 வெற்றிக்கரமான விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 3 நிலவை நோக்கிய தனது பயணத்தை திட்டமிட்டப்படி மேற்கொண்டுவருவதாக வீரமுத்துவேல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஞ்ஞானி வீரமுத்துவேல் தங்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் உள்ளதாக அவர் பள்ளி படிப்பை முடித்த விழுப்புரம் ரயில்வே பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இடம்பெற்றது தமிழர்களிடையே பெருமையை சேரத்துள்ளது. இந்த திட்டம் வெற்றியடையும் நிலையில், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா திகழும்.

இதையும் படிங்க.!