chennireporters.com

அலைகழிக்கப்படும் வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்கும் ”எஸ்.பி.ஐ.” நிர்வாகம்.

ஆவடியில் உள்ள பாரத ஸ்டேட்  வங்கிகளில் சேவைகள் சரியில்லை வங்கி ஊழியர்கள் பொதுமக்களை இழிவுபடுத்தி பேசுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ஆவடியை சுற்றி உள்ள  பகுதிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருக்கிறது.  இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்களை சந்தித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.  இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அது தவிர வங்கியில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரம் பெரும்பாலான நேரங்களில் வேலை செய்வதில்லை வங்கி பரிவர்த்தனைகளை பதிவு செய்யும்  என்ட்ரி மெஷின் வேலை செய்வதில்லை குறிப்பாக ஆவடி HVF வங்கியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக ஏடிஎம் மையங்களில் கதவுகள் உடைந்து காணப்படுகிறது.

அது தவிர அங்கு உள்ள இரண்டு பணம் எடுக்கும் இயந்திரம் பணம் போடும் இயந்திரம் எதுவும் வேலை செய்வதில்லை . மாறாக அங்கு திறந்த வெளி ஜீப்பில் பணம் எடுக்கும் இயந்திரம் மெஷின் வைக்கப்பட்டுள்ளது.  என்ட்ரி மெஷின் வேலை செய்வதில்லை இதனால் முதியோர்கள் குறிப்பாக ஓய்வூதியம் வாங்க வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள என்டரி மிஷின் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்

இது குறித்து வங்கியின் முதன்மை மேலாளர் நந்தா பார்த்த சாரதி சந்தித்து விபரம் கேட்டால் டெபுடி மேனேஜர் தர்ம சாஸ்தாவை பார்க சவல ஃவார் . அவரை சந்தித்தால் ஒர்கிங் மேனேஜரை பார்க்க சொல்வார் அதற்குள் மணி இரண்டு ஆகிவிடும் அப்புரம் அனைவரும் சாப்பிட சென்று விடுவார்கள்.  இவர்களின் செயல்பாடுகள் நாய்களை விரட்டுவதைப்போலவே இருக்கும்.

இது தொடர்பாக அதிகாரிகளை கேட்டால் வயதான மூத்த குடிமக்களை மரியாதையாக  ஒருமையில் பேசி வெளியே போகச் சொல்லுமாறும் மிரட்டும் தொணியில் பேசுகின்றனர். ஒரே நேரத்தில் எல்லா ஊழியர்களும் கூட்டாக சேர்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களை மிரட்டுவது  போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அது தவிர வேலை ஒரே நேரத்தில் அனைவரும் சாப்பிட சென்று விடுவார்கள்.  இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

சிறிய சந்தேகங்களை கேட்க சென்றால் கூட டோக்கன் எடுத்து வாருங்கள் இல்லையென்றால் நேரத்தை வீணாக்காதீர்கள் வெளியே செல்லுங்கள் என்று மிரட்டுவார்கள்.

வேலை நேரத்தில் மிகப்பெரிய வலுவான வேலையை செய்து கிழித்து முடித்து விட்டதைப்போல  அடிக்கடி டீ குடிப்பது காபி குடிப்பது தின்பண்டங்களை சாப்பிடுவது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு பொதுமக்கள் பலர் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களை அசிங்கமாக திட்டி செல் கின்றனர்.

அது தவிர வெளிநாட்டு பங்கு பரிவர்த்தனைகளுக்கு ஸ்டேட் பேங்க் ஏடிஎம் கார்டு வேலை செய்யாது என்கின்றனர். வாடிக்கையாளர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள்  ஒரு பதிலை சொல்வார்கள் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் உங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது நேரத்தை வீணாக்காதீர்கள் இடத்தை காலி செய்யுங்கள் என்று திமிராக பேசுவது இப்படி திமிர்த்தனமாக பேசுபவர்களை பொதுமக்கள் மிகவும் கோபமாக அசிங்கமான வார்த்தைகளில் திட்டும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

ஆவடியில் உள்ள முப்படை துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இந்த வங்கியில் தான் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு கூட சரிவர பதில் சொல்லாமல் புறக்கணிக்கிறார்கள். வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத  இவர்களை எந்த  மிருகங்களுடன் ஒப்பிடுவது என்று தெரியவில்லை என்று சொல்லுகிறார் மூத்த ஓய்வூதியர் சுப்பிரமணி ஐயங்கார்.

ஏறக்குறைய தமிழ்நாட்டில் மட்டும் 1677 sbi வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 344 sbi வங்கிகள் செயல்பட்டு வருகிறது.  இந்த அனைத்து வங்கி கிளைகளிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.  இதை சரி செய்ய அரசு எந்தவிதமான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசு அதிகாரிகள் தாங்கள் அனைவரும் வானளாவிய அதிகாரம் பெற்றவர்கள் என்றும் தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கிற திமிரில் பணியாற்றுகிறார்கள். தவறு செய்யும் அதிகாரிகளை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அவர்களை அடித்து உதைக்கலாம் என்கிற சட்டம் உருவாக்கப்படும் போது  தான் அரசு அதிகாரிகள் வாலை சுருட்டி கொண்டு ஒழுங்காக வேலை பார்ப்பார்கள் என்கின்றனர் பணக்காரர்களுக்கு கடன் கொடுத்து நாட்டை ஏழையாக்கி வைத்துள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஏழை பொதுமக்கள்.

இதையும் படிங்க.!