chennireporters.com

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் தனிநபர் மசோதா கொண்டு வந்த திமுக எம்.பி. வில்சன்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் தனிநபர் மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. வில்சன் தாக்கல் செய்தார்.கடந்த 1976ம் ஆண்டு பொதுப்பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டது.

இதனை மாற்றி மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் தனிநபர் மசோதாவை வில்சன் கொண்டு வந்தார்.

மாநிலங்களவையில் மசோதாவை நேற்று தாக்கல் செய்த பின்னர் அவையில் பேசிய வில்சன் எம்.பி. மாநில அரசுகளின் கட்டமைப்பில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஒன்றிய அரசு நேரடியாக நடத்தும் கல்வி நிறுவனங்களை மட்டும் ஒன்றிய பட்டியலில் வைக்க வேண்டும்.இதற்கு ஏதுவாக அரசியல் சாசன திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த 1976 ம் ஆண்டு கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.தொழில்நுட்பம், மருத்துவம் பல்கலைகழகங்கள் போன்றவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன.

இதனை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு மாநிலங்களவையில் எம்.பி. வில்சன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும்
என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!