chennireporters.com

கள்ள காதல் விவகாரம் பெண்#sub-inspector I எஸ்.ஐ மீது கொடுர தாக்குதல்.கர்நாடக #ips அதிகாரி கைது.

பெண் சப் இன்ஸ்பெக்டர் sub-inspector உடன் ஐபிஎஸ் ips அதிகாரிக்கு ஏற்பட்ட  கள்ளக்காதல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஈரோட்டில் கைது செய்யப்பட்ட விவகாரம் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#sub-inspector I #ips I #ilakkiya karunakaran ips I #erode I # forgery ips I# karnataka ips I # arun rangarajan

அருண் ரங்கராஜன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கருமையா வீதியைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன். இவர் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவரின் மகன் அருண் ரங்கராஜன்.  இவர் 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிக்குச் சேர்ந்தார். பணியில் இருந்தபோது அதே மாநிலத்தில் பணியாற்றிய இலக்கியா கருணாகருன் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இருவரும் கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளனர்.

IPS OFFICERS TRANSFERRED | 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்; கர்நாடக  அரசு உத்தரவு

மனைவி இலக்கியா ஐபிஎஸ்

அருண் ரங்கராஜன் கலாபுர்கி மாவட்டத்தில் உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி-யாக பணியாற்றியபோது, அதே மாவட்டத்தில் பணியாற்றிய  பெண் சப் இன்ஸ்பெக்டர் சுஜாதா (38) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளகாதல் விபரம்  குறித்து கண்டப்பா அருண் ரங்கராஜனின் மனைவியான இலக்கியா கருணாகரனிடம் கூறி உள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், சுஜாதாவின் கணவர் கண்டப்பாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கண்டப்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அப்போது கர்நாடகா மாநிலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அருண் ரங்கராஜன் தார்வார் மாவட்ட உள் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி-யாக மாற்றப்பட்டார்.

ಪೊಲೀಸ್ ಪತಿಯನ್ನು ಮನೆಗೆ ಸೇರಿಸದ ಪೊಲೀಸ್ ಪತ್ನಿ | Police vs Police | Husband vs  wife | IPS - video Dailymotion

மனைவி இலக்கியா ஐபிஎஸ் உடன் அருண் ரங்கராஜன்.

அருண் ரங்கராஜனுக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, அவரின் மனைவி இலக்கியா கருணாகரன் குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து சென்றார். அவர்களுக்கு விவாகரத்தும் ஆகியுள்ளது. இந்நிலையில் அருண் ரங்கராஜனும்  சுஜாதாவும் இருவரும் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அருண் ரங்கராஜன் மற்றும் பெண் எஸ்.ஐ சுஜாதா ஆகியோர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்துக்கு வந்துள்ளனர். அங்கு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், சுஜாதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுஜாதாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.  காயமடைந்த சுஜாதா, கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

IPS ದಂಪತಿ ಕಲಹ: ಮಕ್ಕಳಿಗಾಗಿ ಪತಿರಾಯ ಯೂನಿಫಾರಂನಲ್ಲೇ ಧರಣಿ! - Kannada News | Ips  arun rangarajan sits dharna in front of his ips wife residence demanding  for children in bengaluru Kannada News

மனைவி இலக்கியா ஐபிஎஸ் உடன் அருண் ரங்கராஜன்.

அதில் மருத்துவர்கள் விசாரித்ததில் கள்ள காதல் கணவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன் அடித்ததாக கூறியுள்ளார்.  அப்போது டாக்டர்கள் கோபி கோலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்து விசாரித்த போலிசாரிடம் சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், ஆபாசமாகத் திட்டுதல், தாக்குதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கோபி போலீஸார், ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ಐಪಿಎಸ್ ಅಧಿಕಾರಿ ಜೊತೆ ಮಹಿಳಾ ಪಿಎಸ್ ಐ ಸರಸ ಸಲ್ಲಾಪ- ಪತಿ ಕೈಗೆ ರೆಡ್ ಹ್ಯಾಂಡ್ ಆಗಿ  ಸಿಕ್ಕಾಗ ಪ್ರಲಾಪ- ಅರೆ ಬೆತ್ತಲು ದೃಶ್ಯ ರೆಕಾರ್ಡ್ - vishwasamachar

கள்ளக் காதலியுடன் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜன்.

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் விஜய் அழகிரி, ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜனை தனது சொந்த ஜாமீனில் விடுவித்தார். பெண் எஸ்.ஐ தாக்கப்பட்ட விவகாரத்தில், கர்நாடகா மாநில  ஐபிஎஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!