chennireporters.com

#narcotics ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் திமுக பிரமுகர் தலைமறைவு.

போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் கெமிக்கலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த திமுக பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர். அவரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி  உத்தரவிட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்

சமீப காலமாக கூரியர் மூலமும் அதிக அளவில் போதைப் பொருட்களை கடத்த ஆரம்பித்துள்ளனர். கடத்தல்காரர்கள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி போதைப்பொருளை கடத்தி வருகின்றனர். சமீபத்தில் டெல்லி மற்றும் புனேயில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்போதைப்பொருள் அதிக அளவில் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.
மெத்தம் பேட்டமைன் என்ற போதைப்பொருளை தயாரிக்க  சூடோபெட்ரைன் என்ற ரசாயானம் முக்கிய பங்குவகிக்கிறது. இந்த ரசாயானத்தை அதிக அளவில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்நாட்டு சுங்க அதிகாரிகள் இந்தியாவிற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்

இது தொடர்பான விசாரணையில் கடத்தல் காரர்கள்  சூடோபெட்ரைன் எனும் மூல ரசாயானத்தை தேங்காய் பவுடர் என்றும், ஹெல்த் மிக்ஸ் பவுடர் என்றும் கூறி அனுப்பிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இந்த ரசாயானம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஒரு கிலோ ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ரசாயானம் பெரும்பாலும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்படுவதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அக்கும்பலை பிடிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீஸாரும் இணைந்து தனிப்படை அமைத்தனர்.

மெத்தம்பெட்டமைன்

 நான்கு மாதங்களாக தொடர்ந்து  தனிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதோடு அவர்களுக்கு கிடைத்த போன் நம்பர்களையும் தீவிரமாக கண்காணித்தனர். இது குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் கூறுகையில், ”4 மாத விசாரணையில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சூடோபெட்ரைன் ரசாயானத்தை அனுப்ப முயற்சி நடப்பதாக தகவல் கிடைத்தது.
கைதானவர்கள்
இதையடுத்து மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் என்ற இடத்தில் உள்ள குடோன் ஒன்றில் ரெய்டு நடத்தினோம். அங்கு சூடோபெட்ரைனை உணவு தானிய பாக்கெட்களில் அடைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து 50 கிலோ ரசாயானம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3,500 கிலோ ரசாயானம் வரை 45  முறை வெளிநாடுகளுக்கு அனுப்பிது  தெரிய வந்துள்ளது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2000 கோடிக்கும் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

இந்த கடத்தல் மோசடிக்கு மூளையாக இருப்பது தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர்  என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பதவியில் இருந்து வருகிறார்.  இவர் தற்போது  தலைமறைவாகிவிட்டார்.

Pseudoephedrine - Wikipedia

சூடோபெட்ரைன்

அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்தால்தான்  சூடோபெட்ரைன்  அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற விபரம் தெரிய வரும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இவற்றை இறக்குமதி செய்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

As DMK General Secretary If Duraimurugan chooses Who is the next treasurer? | திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்?

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன்

இவர் தனது சகோதரர் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர்களுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இது குறித்தி செய்தி வெளியானதும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜாபர் சாதிக்கை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க.!