சென்னை மாநகர் அருகே உள்ளது பூந்தமல்லி. ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இந்த பகுதியில் நடக்காத பிசினஸ்களே இல்லை என்று சொல்லலாம். திரும்பிய பக்கமெல்லாம் கஞ்சா, திரும்பிய பக்கமெல்லாம் கள்ள சந்தையில் மது, திரும்பிய பக்கமெல்லாம் காட்டன் சூதாட்டம், மூன்று நம்பர் லாட்டரி, விபச்சாரம் என எல்லா தொழில்களும் படு பிசியாக நடந்து வருகிறது.
பொதுமக்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுடைய தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை இந்த மூணு நம்பர் லாட்டரியில் விட்டு சீரழிந்து வருகிறார்கள் என்று நமக்கு ஒரு ஆட்டோ டிரைவர் நமது அலுவலகத்திற்கு ஒரு போன் செய்திருந்தார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாம் சம்பந்தப்பட்ட பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள சென்னீர் குப்பம் பகுதியில் உள்ள பாலமுருகன் சினிமா தியேட்டரில் நடைபெற்று வரும் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினோம். அங்கு நடக்கும் வியாபாரம் தொடர்பாக வீடியோவாக நாம் பதிவு செய்துள்ளோம். அந்த இடத்தில் ஏவிகே டியர் என்னும் மூணு நம்பர் லாட்டரி, ஏவிகே, என்னும் மூணு நம்பர் லாட்டரி, ஏவிகே பூட்டான் என மூன்று பெயர்களில் இந்த மூன்று நம்பர் லாட்டரி வியபாரம் நடந்து வருகிறது. இந்த லாட்டரியில் 30 ரூபாய் 50 ரூபாய் , 100 ரூபாய், 200 ரூபாய், 300 ரூபாய் என பணம் கட்டினால் அவர்கள் கொடுக்கும் நம்பருக்கு ரிசல்ட் வந்தவுடன் பணம் கிடைக்கும். முடிவு கேரளாவில் இருந்து மாலை வந்தவுடன் அவர்களுக்கு பணம் தரப்படும்.
அந்த இடத்தில் திருவிழா காலங்களில் சந்தையில் கூடும் மக்கள் கூட்டங்களை போல இருந்தது. அந்த இடத்தில் நம்பர் எழுதுபவருக்கு ஒரு வினாடி கூட நேரமில்லாமல் வேக வேகமாக எழுதிக் கொண்டே இருந்தார்கள். ஆட்டோ டிரைவர்கள், மூட்டை தூக்குபவர்கள், கொத்தனார் வேலை செய்பவர்கள் என பலரும் கையில் பேனா பேப்பர் வைத்துக்கொண்டு கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
அந்த மூணு நம்பர் லாட்டரி கொடுக்கப்படும் சீட்டில் பாவிகளை இரட்சிக்கும் இயேசுவின் சிலுவை ஒரு பக்கமும் எட்டு மணி என்கிற ஒரு எழுத்தும் ஏவிகே டியர் என்று தலைப்பில் துண்டிச்சிட்டு வழங்கப்படுகிறது அதில் பெயருக்கு ஒரு இன்சியிலும் அந்த நம்பரும் கொடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு லாட்டரி தடைச் சட்டம் கொண்டு வந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆகிறது . ஆனால் ஆளுங்கட்சி பூந்தமல்லி திமுக விஐபிகள் போலீஸ் ஆதரவுடன் இந்த வியாபாரத்தை கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகின்றனர். பிசனஸ் நடத்த ஏதுவாக தாங்கள் காவல் துறையினருக்கு கொடுக்கப்படும் லஞ்ச விபரத்தை விலாவரியாக சொன்னார்கள்.
பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு அதாவது இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் சப் இன்ஸ்பெக்டருக்கு 10,000 உளவுத்துறை ஏட்டுக்கு ஐந்தாயிரம் பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஏசிக்கு 40,000 டிசி க்கு 50000ம் உயர் அதிகாரிகளுக்கு பெரிய தொகை மாதம் லஞ்சமாக இல்லாமல் மாமூலாக இல்லாமல் கை செலவுக்காக வழங்கி வருகின்றனர் மூன்று சீட்டு நடத்தும் திமுக விஐபிகள்.
குன்றத்தூர், மாங்காடு போன்ற பகுதிகளிலும் இந்த மூன்று சீட்டு லாட்டரி சீட்டும் விபச்சாரங்களும் படு பிஸியாக நடைபெற்று வருகிறது. தனிக்கதை.
ஆவடி மாகர காவல் ஆணையர் சங்கர்.
இந்த மூன்று சீட்டு லாட்டரி நடக்கும் பாலமுருகன் தியேட்டருக்கு போகும் வழியில் நூற்றுக்கணக்கான பைக்குகளும் ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பக்கத்தில் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தினம்தோறும் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டுகிறார்கள். பணத்தை எண்ணுவதற்கே நேரமில்லாமல் திக்கு முக்காடுகிறார்கள் ஊழியர்கள்.
பணம் கட்டும் நபர்களுக்கு யாரோ ஒருவருக்கு மட்டும் தான் பணம் கிடைக்கிறது. மீதமுள்ள அனைவரும் நாமம் தான். ஆனால் அவர்கள் ஜஸ்ட் மிஸ் வேற நம்பர் மாறிடுச்சு நமக்கு அதிர்ஷ்டம் இல்ல வாடா போலாம் டாஸ்மாக்கு என்று சொல்லி தான் நடையை கட்டுகிறார்கள். தினமும் உழைத்து கிடைக்கும் ஊதியத்தில் இப்படி தேவையில்லாமல் பணம் கட்டி ஏமாறுவதை எப்போது தான் இவர்கள் உணர்வார்கள்??? பூந்தமல்லி திமுக எம்எல்ஏ மற்றும் திமுக மாவட்ட செயலாளர் திமுக நகராட்சி சேர்மனின் கணவர் துனையுடன் மூன்று சீட்டு லாட்டரி வியபாரம் நடந்து வருவதாக சொல்கிறார்கள் பூந்த மல்லி திமுக நில்வகிகள் சிலர்.
இந்த செய்தி தொடர்பாக காவல்துறை அதிகாரிகளோ அல்லது திமுகவினரோ அவர்களது தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக அருக்கிறோம்.