chennireporters.com

லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி.கைது

டி.எஸ்.பி.தங்கவேல்

லஞ்ச ஒழிப்பு பிரிவு போலிசாரிடம் டிஎஸ்பி ஒருவர் பிடிபட்டார்.இந்த செயல் காவல் துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றின விவரம் வருமாறு,

குமரி மாவட்டம் மாநிலத்திலேயே லஞ்சம் கொழிக்கும் மாவட்டமாக விளங்குகிறது. இதற்காகவே பணியிட மாற்றம் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள் அரசு அலுவலர்கள்.

நேர்மையான அதிகாரிகள் யாரேனும் இம் மாவட்டத்திற்கு வந்தாலும் கூட அவர்களையும் இந்த போராளிகள் மாற்றி விடுகிறார்கள்.கனிமவளத்தை கடத்துவதில் தமிழகத்திலேயே முதல் இடம் வகிக்கும் மாவட்டம் குமரிமாவட்டம் என்பதினாலேயே இந்த சூழல்.

இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

நில தகராறு சம்பந்தமான வழக்கில் அந்த வழக்கை முடித்து தர நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் சிவ குற்றாலம் என்பவரிடமிருந்து.

ஐந்து லட்ச ரூபாய் கட்டாயப்படுத்தி மிரட்டி லஞ்சம் பெற்ற டி.எஸ்.பி தங்கவேல் ரூபாய் 5 லட்சம் லஞ்சப் பணத்தை பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

அதுவும், மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் எஸ்.பி அலுவலக வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஆக பணிபுரிந்த மதியழகன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவைத்தார். ஆனால் தற்போது குமரி மாவட்டத்தில் புதிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

இதையும் படிங்க.!