#irs officer gst ஆணையத்தின் துணை ஆணையர் பாலமுருகன் திடீர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
#irs officer| #gst| #income tax|#irs officer balamurugan| #finance minister of india|#nirmala sitharaman
தமிழகத்தை சேர்ந்த irs officer அதிகாரியும், gst ஆணையத்தின் துணை ஆணையருமான பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவர் பணியிடைநீக்கம் செய்யபட்டுள்ளார். பாலமுருகன் சேலம் ஆத்தூரை சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
IRS துணை ஆணையர் பாலமுருகன்
3 மாதங்களுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு கேட்டு விண்ணபித்திருந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு விண்ணப்பம் நிராகரிக்கபட்டு, நாளை ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரகத்தில் பணியாற்றிய போது தன்னால் ஹிந்தியில் எழுத முடியாது, தனக்கு ஹிந்தி தெரியாது என ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக சேலத்தில் அவரது வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார். அதற்காக அப்போது அந்த துறையின் உயரதிகாரிகளால் இவர் சஸ்பெண்ட் செய்யபட்டார். இதே போல் 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் ராஜிணாம செய்ய கோரி கடிதம் எழுதியிருந்தார். அப்போது அவரது ராஜினாம கடிதம் ஏற்றுகொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்னதாக விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த மனு நிராகரிக்கபட்டதை அடுத்து, நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று அவர் திடீரென பணியிடைநீக்கம் செய்யபட்டுள்ளார்.
இந்திய வருவாய் பணிகளில் பணியாற்றிய தமிழக அதிகாரிகள் மட்டுமில்லாமல் வட இந்திய அதிகாரிகள் கூட இதுவரை ஒன்றிய நிதி அமைச்சருக்கு எதிராக பேசியதும் இல்லை எழுதியதும் இல்லை. ஆனால் ஜிஎஸ்டி ஆணையத்தின் துணை தலைவராக இருக்கிற பாலமுருகன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதினார். இது போன்ற செயல்களை இந்திய வருவாய் ஆட்சிப் பணித்துறை வரலாற்றில் யாரும் இது போல் தைரியமாக துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக கடிதம் எழுதியது இல்லை. முதன்முதலாக இந்திய அரசுப் பணியின் வரலாற்றில் ஏன் இந்திய சுதந்திர வரலாற்றில் தனக்கென ஒரு பெயரையும் வீரமுள்ள தமிழன் என்கிற பெருமையும் பெற்றுள்ளார் ஜிஎஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவர் பாலமுருகன்.