chennireporters.com

உதவி இயக்குனரின் கதையைத் திருடிய விருமன் இயக்குனர் முத்தையா.

நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக் நடித்து வெளிவர இருக்கும் விருமன் படத்தின் கதை தன்னுடையது என்று துரை என்கிற உதவி இயக்குனர் நீதிமன்றத்தின் படி ஏறி இருக்கிறார்.

 

என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.

நாளை ரிலீஸ் ஆகும் கார்த்திக் நடித்த விருமன் படத்தின் கதை திருட்டில் சிக்கி திரு திருவென விழித்து நிற்கிறது படக்குழு.

அந்த படத்தில் இயக்குனர் முத்தையா இதே கார்த்திக்கை வைத்து கொம்பன் படத்தை எடுத்த போதும் துரை என்கிற உதவி இயக்குனரின் கதையை திருடி மாட்டிக் கொண்டார்.

எல்லா பஞ்சாயத்துக்களும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதால் கொம்பன் படம் ரிலீஸ் ஆகி செம ஹிட் அடித்தது.

இப்போது அதே துரையின் கதையை திருடி விருமன் படத்தை எடுத்த பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா.

இயக்குனர் முத்தையா.

விருமன் கதை என் தன்னுடையது என்பதை நிரூபிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட்டின் முதன்மை நிர்வாகியான ராஜா என்கிற ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியனை சந்திக்க முயற்சித்து இருக்கிறார்.  துரை ஆனால் பலன் அளிக்கவில்லை.

கடந்த பத்தாம் தேதி நீதிமன்றத்தில் 2D மீதும் டைரக்டர் முத்தையா மீது வழக்கு தொடர்ந்து விட்டார் துணை இயக்குனர் துரை.

இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் 2D தயாரிப்பாளர்களான சூர்யா,ஜோதிகா, டைரக்டர் முத்தையா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12 விருமன் ரிலீஸ் என்று காலை 10 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விருமன் அதிகாலை ஸ்பெஷல் ஷோரூம் காலை 10 மணிக்கு ஷோவும் ரத்தாகலாம் என்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால் விருமன் ரிலீசே ரத்தாகும் வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

ஒருவேளை அவசர வழக்காக விசாரிக்கப்பட்டால் விருமனுக்கு பன்னிரெண்டாம் தேதி பொழுது நல்ல பொழுதாக விடியலாம் இல்லையென்றால் அமாவாசை தான். தீர்ப்பு நீதிமன்றத்தின் கையில்.

இதையும் படிங்க.!