மாமுல் வாங்குவதில் பெயர் போன ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் திடீரென தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது மாற்றம் குறித்து உளவுத்துறையில் பரபரப்பான தகவல்களை சொல்லுகிறார்கள் உளவுத்துறையினர்.
இது போன்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் ஊழல், கிசு,கிசு செய்திகளை அப்படியா பேசுகிறார்கள்? அப்படித்தான் பேசுகிறார்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து இன்று முதல் வெளியிடப்படும்.
டிஎஸ்பி சந்திரதாசன்
பணியில் சேர்ந்த சந்திரதாசன் அதன் பிறகு இன்ஸ்பெக்டராக பணி பதவி உயர் பெற்று டிஎஸ்பி ஆனார். டிஎஸ்பி சந்திரதாசனுக்கு பணம் கொடுத்தால் கார்கோசிஷ், கற்பழிப்பு, விபச்சாரம் என எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பாராம். ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பியாக இருந்த பொழுது அழகாக இல்லாத ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் உடன் நெருக்கமாக இருந்தாராம் அது தவிர அவர் ஜாக்கிங் டிரஸ்ஸில் இருந்த போட்டோவை தனது வாட்ஸ் அப் டிபியில் வைத்து அடிக்கடி பார்த்து மகிழ்ந்தாராம். இந்த கதை சந்தி சிரித்த பிறகு அந்த அம்மனி ஃபோட்டோவை நீக்கினாராம்.
மேலும் அங்கு மணல் குவாரி நடந்த பொழுது இவரும் தன் பங்குக்கு கொள்ளை கூட்டத்தோடு சேர்ந்து மணலை கொள்ளையடித்தாராம் . அங்கு கட்டிய கல்லா கோடிகளை தாண்டுமாம். அங்கிருந்து மாற்றப்பட்ட பிறகு திருவள்ளூர் டிஎஸ்பியாக வந்தார். அங்கு மணவாள நகரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஒரு விஐபி உடன் ஒரு கம்பெனியில் ஸ்கிராப் வாங்குவதில் பாமக பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தனது அதிகாரத்தை காட்டி காலரை தூக்கினாராம் டிஎஸ்பி சந்திர தாசன் . அந்த கம்பெனியின் எச்.ஆர் அமைச்சர் சேகர்பாபுக்கு வேண்டப்பட்டவராம். அப்போது சேகர் பாபு செய்த செயலை பார்த்து இவர் அஞ்சு நடுங்கினாராம். அமைச்சருக்கும் சந்திரதாசனுக்கும் நடந்த லடாயில் கொஞ்ச நாள் காக்கி சட்டை போடாமல், சொந்த காசில் சோறு தின்னவச்சிட்டாராம் அமைச்சர் சேகர் பாபு.
படப்பை குணா
அதன் பிறகு நேர்மையின் சிகரம் என்று சொல்லப்படுகிற சைக்கிள் ஓட்டும் விஐபி இடம் சென்று பல லட்சம் சன்மானமாக கொடுத்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு பணி மாறுதல் வாங்கிச் சென்றார். அங்கு சென்றவுடன் எந்தெந்த கம்பெனியில் யாரெல்லாம் கட்டிங் வாங்குகிறார்களோ அவர்களிடம் இவர் கட்டிங் வாங்க ஆரம்பிச்சிட்டாராம். அப்படி கட்டிங் வாங்கியதில் ஒரு ரவுடிக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டதாம் .
இந்த நிலையில் ஏற்கனவே போந்தூர் மோகன் என்கிற தொழிலதிபரிடம் மோதல் போக்கில் இருந்த ரவுடி குள்ள விஷ்வாவை தீர்த்தக்கட்ட போந்தூர் மோகன் போலீஸ் மூலம் என்கவுண்டர் செய்ய பல கோடிகள் பணம் கொடுத்ததாக பேசப்பட்டது. அந்த புகாரில் குள்ள விஷ்வா ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் தன்னை போலீஸ்காரர்கள் சுட்டுக் கொலை செய்யப்போகிறார்கள் என்று அவர் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விஷயத்தில் குள்ள விஷ்வாவை காப்பாற்றுவதாக சந்திர தாசன் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் சன்மானம் பெற்றுக் கொண்டு என்கவுண்டர் செய்யவும் துணிந்ததுதான் பெரும் பாவம் என்கிறார்கள் விஷ்வாவின் உறவினர்கள்.
குள்ள விஷ்வா
அது தவிர பாஜகவில் சேர்ந்திருக்கிற படப்பை குணா மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் அது தொடர்பான விஷயத்தை சந்திரதாசன் நேரடியாகவே படப்பை குணாவிடம் சொல்லி அதிகாரிகள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகிறார்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று சொல்லி படப்பை குணாவிடம் கொஞ்சம் அன்பையும், கொஞ்சம் காசையும் பெற்றுக் கொண்டாராம் சந்திர தாசன் இது தொடர்பாக உளவுத்துறையினர் போட்ட ரிப்போர்ட் அடிப்படையில் தான் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டாராம்.
சந்திர தாசனின் சொத்து மதிப்பு ஒரு மூன்று தலைமுறை அளவிற்கு சேர்த்து இருக்கிறார் என்கிறார்கள். அவருடன் பணியாற்றிய சக போலிஸ் அதிகாரிகள் அம்பத்தூரில் அழகான சொகுசு மாளிகை ஒன்று கட்டி வருவதாகவும் கூடுதல் தகவல் ஓசி என்றாலும் காசு என்றாலும் சந்திரதாசனுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான் என்கிறார்கள் அவருடன் நெருக்கம் காட்டிய சில வழக்கறிஞர்கள்.
டிஎஸ்பி சந்திரதாசன்
சந்திரதாசனைப்பற்றி அவர் வேலை பார்த்த ஊரில் இப்படித்தான் பேசுகிறார்கள். செய்தியை படிக்கும் வாசகர்களும் அப்படியா பேசுறாங்க என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. ஆமாம் அவரைப்பற்றி அப்படித்தான் பேசுகிறார்கள்.