சம்பள பாக்கி கோரிய ஆய்வாளரின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் டிஜிபி சைலேந்திர பாபு கடமை தவறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் ரஞ்சித். இவர் பணியாற்றிய காவல் நிலையங்கள் அனைத்திலும் லஞ்சம் வாங்காமல் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது. இவருடைய 20 ஆண்டுகால காவல்துறை பணியில் சுமார் 39 முறை பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு இரண்டு மாத காலம் சம்பளம் வழங்கப்படாமல் இருந்திருக்கிறது. பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகியுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. பல மாதங்கள் ஆகியும் நிலுவையில் இருந்த ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் எப்படியாவது இந்த சம்பளம் கிடைத்துவிடும், என காத்திருந்தார். ஓரு வருடமாகியும் சம்பளம் வரவில்லை.. எனவே வேறு வழியின்றி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
ஒரு காவல் ஆய்வாளர், தன்னுடைய சம்பள பாக்கி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் என்கிற விவரம் அறிந்தும் கூட, நிலுவையில் இருந்த சம்பளம் வழங்கப்படவில்லை. மறுபுறம் இந்த வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளதுது. இப்படியே நீதிமன்றத்தை எதிர்பார்த்தும், தனது சம்பளத்தை எதிர்பார்த்தும் ஏறத்தாழ 4 ஆண்டுகள் கடந்திருக்கிறது
அதேபோல ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள மனுதாரரின் சம்பள பாக்கியை வழங்காததும், சம்பள பாக்கியை கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காத டி.ஜி.பி.யின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் கூறியுள்ளார். அத்துடன் ஒரு வாரத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்திருக்கிறார். நீதிபதியின் இந்த கருத்து தமிழக காவல்துறை வட்டாரத்தில் அதிகாரிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேர்மைக்கு பேர் போனவர் சைலேந்திரபாபு என்கிற அதிகாரியின் செயல்பாடு எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை மனதில் கொண்டு அவர் ஓய்வு பெறும் நாளில் அவரின் தலையில் குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.