chennireporters.com

டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விலகாத மர்மங்கள். வதந்தி பரப்பும் அதிகாரிகள்.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டு இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து போனார். இவரது இறப்பு குறித்து இதுவரை தமிழக காவல்துறை எந்தவித சரியான விளக்கத்தையும் தரவில்லை . அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் தனது குடும்பப் பிரச்சினை என்றும் தனது மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்தார் என்றும் பல கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து வருகிறார்கள் காவல்துறையினர். தற்கொலை செய்து கொள்வதற்கு மன உளைச்சல் ஒரு காரணமாக இருந்தாலும் ஏன் அந்த மன உளைச்சல் ஏற்பட்டது? மன உளைச்சல் ஏற்படுவதற்கு யார் காரணம் ? எதற்காக அந்த மன உளைச்சல் ஏற்பட்டது? என்கிற எந்த விஷயத்தையும் இதுவரை காவல்துறை அறிவிக்கவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாக தூக்கம் இல்லாமல் மருந்து சாப்பிட்டு வந்தார் என்றும் பல்வேறு கட்டுக்கதைகளை சமூக வலைதளங்களில் தமிழகப் போலீசார்  கதை கதையாய் அளந்து விட்டு வருகிறார்கள். சாதாரண சாமானியன் இறந்து போனால் அவன் எப்படி இறந்தான் அவனுக்கு எத்தனை மனைவி எத்தனை கள்ளக்காதலி எங்கெல்லாம் திருடினான் என்ன காரணம் அவருடைய செல்போன் அவர் யாரிடம் பேசினார் ஆடியோ வீடியோ அவருடைய நண்பர்கள் என அனைத்தையும் பட்டவர்த்தனமாக வெளியிட்டு காலரை தூக்கிக்கொண்டு மீசையை முறுக்கு தமிழக காவல்துறை  அதிகாரிகள்.டிஐஜி விஜயகுமார் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை சொல்லத் துணி இல்லாமல் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி பல கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்கள்.

டிஐஜி விஜயகுமார் தன்னுடைய ”  கை துப்பாக்கியால் ” சுட்டு தற்கொலை செய்து கொள்ளாமல் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன? மன உளைச்சலில் இருந்தவர் எப்படி போலீஸ் அதிகாரியின் மகன் பிறந்தநாள் விழாவுக்கு சென்றார்.? மன உளைச்சலில் இருந்த அதிகாரி எப்படி தினம் தோறும் வாக்கிங் சென்றார்.? மன உளைச்சலில் இருந்த அதிகாரி எப்படி தினமும் அலுவலகப் பணிகளை மேற்கொண்டார்.? மன உளைச்சலில் இருந்து அதிகாரிக்கு ஏன் டிஐஜி போஸ்டிங் கொடுக்கப்பட்டது.?இப்படி பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழாத நிலையில் அவர் மன உளைச்சலில் இருந்தார் மருந்து சாப்பிட்டார் குடும்பப் பிரச்சனை என்று ஒரு ஒழுக்கமான நேர்மையான அதிகாரியின் மீது அபாண்டமான பழி சுமத்துவதை இனிமேலாவது தமிழக போலிஸ் அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர் இறந்து போன டிஐஜி விஜயகுமாரின் உறவினர்கள்.உண்மையை விசாரித்து உலகிற்கு சொல்ல வில்லை என்றாலும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் அது விஜயகுமாரின் ஆத்மா மன்னிக்காது என்கிறார்கள்.

காவல் துறையினர் காலரை தூக்கி மீசையை முறுக்காமல்  அவரின் நேர்மைமை நினைத்து அவரது மரணத்தை கொச்சைப்படுத்தாமல் மௌனம் காத்து வாயை மூடிக் கொண்டு பொய் பரப்பாமல்  இருந்தாலே போதும் யாரும் கேள்வியும் கேட்க மாட்டார்கள் அவரின் மரணத்தை பற்றியும் பேசமாட்டார்கள் என்கிறார்கள்.  நீங்கள்(போலீஸ் அதிகாரிகள்) ஊமையாக இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும்.

இதையும் படிங்க.!