chennireporters.com

தெலுங்கு பாடலை பாடிய டச் நாட்டு பாடகி.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா நடித்துள்ள புஷ்பா என்கிற தெலுங்கு படம் தமிழ், கன்னடம்,என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த படத்தில் இடம் பெற்றுள்ள பார்வை கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா என்கிற பாடல் இதுவரை 14 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.2 கோடிக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.இந்த பாடலை டச் (பிரான்ஸ்) நாட்டு பாடகி ஏமா ஹிஸ்டரஸி என்பவர்

தெலுங்கில் வெளியான தெலுங்கு வெர்ஷன் பாடலை ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் கலந்து பாடியுள்ளார்.இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பாடகி அந்தப்பாடலை மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார்.இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடியுள்ளார்.

எம்மா ஹீஸ்டர்ஸின்

இவர் தனது ஸ்டுடியோ அறைக்குள் பாடும் இந்த பாடல் காட்சியை வீடியோவாக படம் பிடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.தமிழில் கவிஞர் விவேகா அந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடல் உலகம் முழுவதும் உள்ள திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக பாடப்பட்டு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடல்தான் இந்தியா முழுவதும் தற்போது சினிமாவில் ட்ரெண்டிங் ஆன பாடல்.

இதையும் படிங்க.!