chennireporters.com

#’DMK MLA’-வின் மகன், மருமகள் கைது. புழல் சிறையில் அடைப்பு.

வீட்டில் வேலை செய்த இளம் பெண், தாக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறையில் சிக்காமல் தலைமறைவாக இருந்த பல்லாவரம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன் ஆன்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
dmk mla karunanidhi son and daughter in law arrested in andhra pradesh சிறுமியை சித்ரவதை செய்த வழக்கில் பதுங்கி இருந்த திமுக MLA மகன். மருமகள் கைது !

திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள்.

சென்னை திருவான்மியூரில் பல்லாவரம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ஆன்டோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள், வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த பொங்கல் தினத்தன்று விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணின் மகளின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து குடும்பத்தினர், அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: கைதான திமுக MLA மகன், மருமகள் - நீதிபதி அதிரடி உத்தரவு! - தமிழ்நாடு
காயங்களுடன் சிறுமி .
திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள்.
திமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள்.

இந்த நிலையில், வழக்கில் ஆன்டோ மதிவாணன், மர்லினா ஆகியோரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸாருக்கு ஆன்டோ மதிவாணனும் மர்லினாவும் தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியில் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அங்கு சென்ற தனிப்படை போலீஸார், இருவரையும் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.  விசாரணைக்குப் பிறகு இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் மூன்றாவது அமர்வு நீதிபதி ஆனந்தன் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.  அவர்களை வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பிறகு இருவரையும் போலிசார் புழல் சிறையில் அடைத்தனர்.

ஆன்டோ , மர்லினா தம்பதி - FIR

ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா  – FIR

முன்னதாக பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி தன் மகன் மீதான குற்றச்சாட்டு குறித்து சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கலாம் அதற்கு எந்த வகையிலும் நான் தடையாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஆன்டோ மதிவாணனின் குரல் பதிவு அடங்கிய செய்தியை அந்த நிறுவனம் வெளியிட்டது.

பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைதுதிமுக எம்.எல்.ஏ-வின் மகன், மருமகள்.

அதில் அந்த பெண் குறித்து பல தகவல்களை கூறியிருந்தார் ஆன்டோ மதிவாணன் தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொள்வதற்கு இந்த மாணவி துணையாக இருந்ததாகவும் அவருடைய நண்பர்கள் தங்களுடைய நிறுவனத்துக்கு சிறப்பாக பணி செய்தார்கள் என்பதையும் அவர் அந்த ஆடியோவில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தது. விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதே போல  எவிடன்ஸ் கதிர் இது தொடர்பாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மணிப்பூர் விஷயத்தில் வாய் திறக்காத தேசிய மகளிர் ஆணைய தலைவர் குஷ்பூ இந்த சம்பவம் குறித்து அரசையும் போலீசாரையும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் இந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க.!